Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்காரை நோக்கி இசைஞானி இளையராஜா..

இசைஞானி இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த்திரைப்படம் “அந்தோனி” யின் ஆஸ்கார் நோக்கிய பயணிக்கிறது

ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ்  தயாரிப்பிலும், கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் அந்தோணி படம் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்ற வெற்றித்திரைப்படமாக மாறியிருந்தது.

திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala போன்ற பல முன்னனி OTT தளங்களில் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ‘அந்தோனி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தினூடாக 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கார் விருது விழாவிற்கான தேர்வுக்குழுவிற்கு அனுப்பியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர்.

உலமறிந்த மாபெரும் இசைமேதை The Maestro என்ற அழைக்கப்படும் இசைஞானி இளையராஜாவின் இசையில் வரலாற்றில் முதல் இலங்கை தமிழ் திரைப்படம் எனும் பெருமைய கொண்ட இப்படைப்பிற்கு உலகளாவிய ரீதியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஹரி –  அருண்விஜய்  கூட்டணியில் உருவாகும் படம்  “யானை” பர்ஸ்ட் லுக்

Jai Chandran

Varisu is not a film.. its Vijay’s faith in me;  Director Vamsi

Jai Chandran

Ravi Varman has been honoured with Membership of ASC

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend