Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு.

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர். குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) வெளியிடப்பட்டுள்ளது.

உற்சாகமிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது. ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலலையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா, காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை டிரைலர் வெளிப்படுத்துவோடு படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
படம் குறித்து பேசிய பிருந்தா, “இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும்,” என்று கூறினார்.
‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி. இசை கோவிந்த் வசந்தா. படத்தொகுப்பு ராதா ஸ்ரீதர். எழுத்து & பாடல்கள் மதன் கார்க்கி. கலை இயக்கம் எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன். சண்டை பயிற்சி அஷோக். நிர்வாக தயாரிப்பு ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம். இணை தயாரிப்பு:குளோபல் ஒன் ஸ்டூடியோஸ். தயாரிப்பு ஜியோ ஸ்டூடியோஸ். இயக்கம் பிருந்தா

Related posts

“Pudhu Vetham” is a leftist film: Thirumavalavan MP speech

Jai Chandran

8 நாளில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ தாண்டவம் ஆரம்பம்

Jai Chandran

முதல்வரிடம் மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend