Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் “13”

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios) நிறுவனம்  அன்ஸு பிரபாகர் பிலிம்ஸ் (Anshu Prabhakar Films) உடன் இணைந்து தயாரிக்க. எஸ்.நந்த கோபால் வழங்கும்,
ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில்  “13” திரைப்பட அறிவிப்பு .

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி னர். இந்த வெற்றி கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் எஸ். நந்த கோபால்,  மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஸு பிரபாகர் பிலிம்ஸ்lnஉடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கே விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையமைக்க, சி.எம் மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெ எஃப் காஸ்ட்ரோ எடிட்டராகவும், எபி.எஸ். ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

 

 

Related posts

மீண்டும் இணையும் பிரபு தேவா, வடிவேலு கூட்டணி

Jai Chandran

வங்காள விரிகுடா (பட விமர்சனம்)

Jai Chandran

லாஜிக் பார்க்காத காமெடி படத்தில் மிர்ச்சி சிவா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend