Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குணா ரீ ரிலீஸ் செய்ய தடை நீங்கியது

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டி ருந்தது.
கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற் கான உரிமையை வைத்திருப்ப தால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறு வெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Related posts

First Look Of Teja Sajja From HANU-MAN Released By Dulquer Salmaan

Jai Chandran

துணிவு பட விமர்சனம்

Jai Chandran

உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend