டிசம்பர் 17ஆம் தேதி அன்று ருஷிய கலாச்சார மையத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன் வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது. இவ்விருந்தினை ருஷிய கலாச்சார மையத்தின் இயக்குனர் திரு கென்னாடி ராக்லேவ் அவருக்கு வழங்கினார்.இவ்விழாவில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன்,தென்னிந்திய ருஷிய தூதரகத்தின் இயக்குனர் ஒலெக் அவ்டீவ் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கலந்துகொண்டனர்.