படம்: எஃப் ஐ ஆர்
நடிப்பு: விஷ்ணு விஷால், கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா, அமான், மாலா பார்வதி, ஆர் என் ஆர் மனோகர், கவுரவ் நாராயணன், பிரவீன் குமார், பிரசாந்த், அபிஷேக், ராம்,சி, பிரவீன் கே, ராகேஷ் பிரமானந்தன், வினோத் கைலாஷ்
தயாரிப்பு: சுபாரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
இயக்கும்: மனு ஆனந்த்
ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ்
பி. ஆர். ஒ : சதீஷ் (AIM), யுவராஜ்
கெமிக்கல் என்ஜினியரிங் படித்த இர்பான் அஹமத் (விஷ்ணு விஷால்) அதற்கு தகுதியான வேலை தேடி பல நேர்காணலுக்கு செல்கிறார். தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தெரிந்தவரின் மெடிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு கெமிக் கல்ஸ் வாங்கும் பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவிற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மூலம் மிரட்டல் இருப்பதால் இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும், தீவிர வாதியை தேடும்படியும் உயர் அதிகாரி அஜய் தேவன் (கவுதம் மேனன்) உத்தரவிடு கிறார். இதற்கான தேடுதல் வேட்டையை அதிகாரிகள் முடுக்கி விடுகின்றனர். தனது நிறுவனத்துக்காக கெமிக்கல்ஸ் வாங்க ஐதராபாத் செல்கிறார் இர்பான். அவர் மீது தீவிரவாத தடுப்பு அதிகாரிகள் பார்வை விழுகிறது. ஐதராபாத் விமான நிலையத் தில் அவரது செல்போன் காணாமல் போகிறது. இதில் பதற்றம் அடையும் இர்பான் அதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கிறார். இந்நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் குண்டு வெடிக் கிறது. இதில் பலர் பலியாகின்றனர். பலர் படுகாயம் அடைகின்றனர். இர்பானின் செல்போன் மூலம்தான் அந்த குண்டு ரிமோட்டாக பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட் டுள்ளது என்பது தெரிகிறது. இதையடுத்து இர்பானை அதிகாரிகள் கைது செய்து அடித்து உதைத்து அவரிடம் விசாரிக் கின்றனர். அவர் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு தண்டனைக் குள்ளாக்கும் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. நான் நிரபராதி, தீவிரவாதி இல்லை என்று எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் அவரது பேச்சை கேட்பதாக இல்லை. இதையடுத்து போலீஸ் பிடியிலி ருந்து இர்பான் தப்பிக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நிஜ தீவிர வாதியோ விஷவாயுவை நகரம் முழுவது காற்றில் கலக்க வைத்து மக்களை கொத்து கொத்தாக சாகடிக்க திட்டம் தீட்டுகிறான். போலீஸ் பிடியிலிருந்து தப்பிய இர்பான் தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைந்து விஷவாயு தயாரித்து தருகிறார். மக்களை கொல்லும் இந்த ஆபத்தான விஷவாயு பற்றி பிரதமரிடம் கூறி அந்த விஷவாயு ஆலையை ஏவுகணை மூலம் தகர்க்க அனுமதியை உயர் அதிகாரி பெறுகிறார். பரபரப்பான இந்த சூழலில் அடுத்து நடப்பது என்ன என்பதை திக் திக் காட்சிகளுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
சாக்லெட் ஹீரோ இமேஜுடன் கோலி வுட்டில் வலம் வந்துக்கொண்டி ருந்த விஷ்ணு விஷால் எஃப் ஐ ஆர் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்த்துக்கு தன்னை உயர்த்திக்கொண்டிருக் கிறார். இர்பான் அஹமத் என்ற இஸ்லாமிய இளைஞன் பாத்திரத்தில் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் முழுஈடுபாடுடன் நடித்திருக்கிறார்.
மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் சிலம்பரசன் டி ஆர் ஏற்படுத்திய அதே பாதிப்பை எஃப் ஐ ஆர் படத்தில் இர்பான் அஹமத் கதாபாத்திரத்தில் ஏற்படுத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால்.
முஸ்லிம் பெயரை வைத்தும், மதத்தை வைத்தும் ஒருவரை தீவிரவாதி என்றும் அதே இந்து பெயரை வைத்துள்ள ஒருவர் மீது எந்த சந்தேக பார்வையும் வீசாதது குறித்தும் விஷ்ணு விஷால் பேசும் வசனங்களில் அர்த்தம் தெறிக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளில் இதுவரை இவ்வளவு ரிஸ்க் எடுத்து விஷ்ணு விஷால் நடித்ததில்லை. தலைகீழாக அவரை தொங்க விட்டு அதிகாரிகள் செய்யும் சித்ரவதையை பார்க்கும்போது மூச்சு முட்டுகிறது. அதேபோல் சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்து மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது.
விஷ்ணுவின் காதல் பிளாஷ் பேக்கில் வரும் ”விசில்” நடிகை ரெபா மோனிகா சஸ்பென்ஸ் பாத்திரமாக கிளைமாக்ஸில் வந்து நிற்கும் போது ஆச்சர்யப்படுத்துகிறார். அதேபோல் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் ரைசா வில்சன் மாறுபட்ட பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.
வழக்கறிஞராக வரும் மஞ்சிமா மோகன் விஷ்ணு விஷாலுக்காக வாதாடுவேன் என்று சொல்லி மிரட்டல்காரர்களை மிரள விடுகிறார். அமான், மாலா பார்வதி, கவுரவ் நாராயணன், பிரவின் குமார், பிரசாந்த், அபிசேக் ஜோஸப், ராம். சி, பிரவீன் கே, ராகேஷ் பிரமானந்தன், வினோத் கைலாஷ் என எல்லா நட்சத்திரங்களும் சங்கிலி தொடர்போல் ஒன்றுக் கொன்று பிணைந்து தங்களது நடிப்பை கதையோட்டத்தின் விறுவிறுப்பு குறை யாமல் வழங்கி இருக்கின்றனர்.
படத்தின் மற்றொரு ஹைலைட் உயர் அதிகாரி அஜய் தேவனாக நடித்திருக்கும் இயக்குனர் கவுதம் மேனன். தீவிரவாதிகளின் ஆட்டத்தை முடிக்க அவர் போட்டுத் தரும் ஸ்கெட்ச் ஒவ்வொரு காட்சிக்கும் உந்து சக்தி. ஸ்டைலான அவரது நடிப்பும் பேச்சும் அழகு.
கவுதம் மேனன் இயக்கிய படத்தை பார்ப்பதுபோலவே எஃப் ஐ ஆர் படத்தை ஸ்டைலாகவும் கனமான காட்சிகளுடனும் பிரேம் பை பிரேம் இயக்கியிருக்கிறார் மனு ஆனந்த். இவர் கவுதம் மேனன் படங்களில் 7 ஆண்டுக்கும் அதிகமாக அவருடைய வலதுகரமாக பணியாற்றியவர். குருவின் பெயரை தக்க வைத்திருப்பதுடன் திறமையான சிஷ்யன் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார் மனு.
சுபாரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
ஆக்ஷன் படத்திலும் கண்களுக்கு குளுமையாக காட்சிகளை பதிவு செய்து அசர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்
பரபரப்பு காட்சிகளில் காணாமல் போய் விடாமல் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து கவனத்தை கவர்கிறார் இசை அமைப் பாளர் அஸ்வத் .
சிக்கலான கதையோட்டத்தில் தெளிவான புரிதல் தரக்கூடிய கைவண்ணத்தை காட்டி யிருக்கிறார் எடிட்டர் பிரசன்னா ஜி.கே.
ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள் படத்துக்கு மட்டுமல்லா மல் ஹீரோ வி்ஷ்ணு விஷாலுக்கும் பெரிய பூஸ்ட். காஸ்டியூம் டிசைனர் பூர்த்தி பிரவின் தகுந்த காஸ்டியூம் டிசைன் செய்து கதாபாத்திரங்களை கண்களில் பதிய வைக்கிறார்.
எஃப் ஐ ஆர் – யார் தீவிரவாதி?.. என்று துணிச்சலாக பேசி இருக்கிறது.
by
ஜெயச்சந்திரன்