Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஃபில்டர் கோல்ட் (பட விமர்சனம்)

படம்: ஃபில்டர் கோல்ட்
நடிப்பு:விஜய பாஸ்கர் டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவ இளங்கோ, நட்ராஜ், சாய் சதிஷ், வல்லவன், செந்தில் நாயக்
தயாரிப்பு:ஆர்.எம்.நானு
இசை: ஹம்மர் எழிலன்
ஒளிப்பதிவு: எம்.பரணிகுமார்
இயக்கம்:விஜய பாஸ்கர்
பி.ஆர். ஒ: சதிஷ் (AIM)

எதிர்பாராத நேரத்தில் சில படங்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தும் அப்படி ஒரு படம்தான் ஃபில்டர் கோல்ட். திரைப்படங்களில் பெரும்பாலும் திருநங்கைகள் கேலி பொருளாகவே இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் வாழ்வியலை அப்பட்ட மாக சொல்லும் படம்தான் ஃபில்டர் கோல்ட்.
திருநங்கையாக இருந்தாலும் ரவுடித் தனத்தில் கைதேர்ந்தவர் விஜி.அவரது தோழி திருநங்கை டோரா மற்றொரு தோழி சாந்தி. கூலிப்படையாக செயல்படும் விஜி கெட்ட செயலில் ஈடுபட்ட நபரை வெட்டி கொல் கிறார்.ஒரு கட்டத்தில் விஜியின் தோழி சாந்தி கொல்லப்படுகிறார்.அதற்கு பழி வாங்கும் விஜி ரவுடித்தனம் செய்யும் பையனை கொல்கிறார். இதனால் கோபம் அடையும் பையனின் தந்தை விஜியின் தோழி டோராவை வெட்டிக்கொல்கிறார்.ஆத்திரம் அடைந்த விஜி, தோழி டோராவை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது கிளைமாக்ஸ்.

பலரும் அறியாத திருநங்கைகளின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய பாஸ்கர் அத்துடன் விஜி என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
திருநங்கைகள் பேசும் ஆபாச வார்த் தைகள் பல இடங்களில் சென்சார் கத்தரிக்கு இரையாகி இருந்தாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை உத்தட்டசைவில் காண முடிகிறது.
விஜி என்ற கதாபாத்திரத்துக்கு அசுர பலம் தந்திருக்கும் இயக்குனர் விஜய பாஸ்கர் அதில் எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்பதை அணு அணுவாக அனுபவித்து அவரே நடித்திருக்கிறார்.

கம்பீரமான நடை, தெனாவாட்டான பேச்சு, கோபமான பார்வை என பட்டய கிளப்பி இருக்கிறார்.
செய்யும் வேலை சட்ட விரோதமாக இருந்தாலும் அதில் நியாயம் இருக்க வேண்டும் என்று வசனம் பேசி அசர
வைக்கிறார்.

விஜியின் அருகில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் எல்லா பார்வையும் விஜி கதாபாத்திரம் பக்கம்தான் செல்கிறது.

டோரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோரா ஸ்ரீ, அசல் நடிப்பில் அசத்துகிறார். திருநங்கை சாந்தியாக நடித்திருக்கும் சுகுமார் சண்முகம் வேடத்துக்காக தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றிக்கொண் டிருக்கிறார்.

திருநங்கை கதை என்றதும் ஏனோ தானோ என்றில்லாமல் பக்ககாவாக ஸ்கிரிப்ட் எழுதி பெரிய ஹீரோக்கள் படங்கள் போல் அதிரடியாக காட்சி களையும் அமைத்திருப்பது பிளஸ்.
இதேகதையை பிரபல இயக்குனர் யாராவது ஒருவர் இயக்கி இருந்தால் இந்நேரம் அவர் கொண்டாடப் பட்டிருப்பார். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் பாராட்டு களையாவது இயக்குனர் விஜய பாஸ்கருக்கு தந்ததாக வேண்டும்.

ஹம்மர் எழிலன் இசையும், எம் பரணிகுமாரின் கேமராவும் படத்துக்கு பக்க பலம்.

ஃபில்டர் கோல்டு – அரிதான கோல்டுதான்.

Related posts

Suriya Thank everyone for supporting JaiBhim.

Jai Chandran

துபாய் தேசிய கீதத்தை புதுமையாக இசைத்த ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி

Jai Chandran

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்.புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend