பெப்சி தலைவர் ஆர்.கே.செல் வமணி, பொருளாளர் பி.எம். சுவாமிநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பெப்சி தொழிலாளர்களை காப்பாற்ற திரையுலகினர் நிதி, உணவு தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்கள் அறிக்கையில் கூறியதாவது:
திரைப்படத் துறையின் நடிகர், நடிகைகள் சகோதர, சகோதரி களுக்கும் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையின் அனைத்து பிரிவினருக்கும்
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேள னத்தின் சார்பில் மிக பணி வான தாழ்மையான வேண்டு கோள்.
கடந்த வருடம் கொரோனா தொற்றின் முதல் அலையில் நீங்கள் அனைவரும் மனமு வந்து அளித்த நன்கொடை மற்றும் உணவு பொருட்கள் ஏறக்குறைய ரூபாய் 5 கோடிக்கும் மேலானது ஆகும்.
இந்த பணத்தின் மூலமும் உணவு பொருட்களின் மூலமாகவும் சம்மேளனத்தின் அனைத்து தொழிலாளர் களுக்கும் அரிசி, பருப்பு
போன்ற மளிகை சாமான்கள் ஆகிய உணவு பொருட்கள் மற்றும் குடும்ப செலவிற்காக கொஞ்சம் நிவாரண நிதி என
அளித்தோம். மேலும் அரசும் மூன்று முறை கொரோனா நிவாரண நிதி அளித்தது.
இதனால் நமது தொழிலாளர் களுக்கும் பசிப்பிணியால் உயிர்பலி இல்லாமல் தொழி லாளர்களை காத்தோம்.
முதல் அலை முடிந்து திரைப்படத் துறை நிமிர்வதற் குள் இரண்டாம் அலையின் தாக்கம் தொடங்கி விட்டது. படப்பிடிப்பும் 100 சதவீதம்
ஆரம்பிக்கப்படாத நிலையில் இரண்டாம் அலையும் உடனே
தொடங்கிவிட்டதால் தற்போது திரைப்படத் தொழிலாளர்கள் நிலை மிகவும் பரிதாபமான நிலை யில் உள்ளது.
சென்ற வருடம் கொரோனா தொற்றில் திரைப்படத் துறையில் கொரோனாவால் உயிர்பலி என்பது ஒன்றிரண்டு என விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது. பட்டினி சாவும் இல்லை. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை யினால் ஏற்பட்ட உயிர்பலி மிகவும் அதிகம். பட்டினி சாவும் ஏற்படக் கூடிய அபாயம் தொடங்கி உள்ளது.
சென்ற முறை வழங்கியது போலவே நிவாரணம் வழங்க வேண்டும் என அரசிடமும் வேண்டுகோள் விடுத்துள் ளோம். அதுபோன்றே
தங்கள் அனைவரிடமும் நன்கொடை மற்றும் உணவு பொருட்கள் மூலம் நாங்கள் தொழிலாளர்களை காப்பாற் றுங்கள். உங்களோடு காலம்
காலமாக பணியாற்றி வந்த திரைப்படத் தொழிலாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் சகோதர, சகோதரிகளை காப்பாற்றுங்கள் என கைகூப்பி வேண்டுகிறோம்.
தற்போது இரண்டாம் முறையாக நடிகர் அஜீத் ரூ.10,00,000,
Endemol நிறுவனம் ரூபாய் 1,00,000, நடிகர் சத்யராஜ் ரூ.2,00,000, நடிகை செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.1,00,000, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரூ.2,00,000 ஆகியோர் கொரோனா நிவாரண உதவி அளித்துள்ளமைக்கு தென்னிந் திய திரைப்படத் தொழிலாளர் கள் சம்மேளனத்தின் சார்பில்
நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொரு ளாளர் பி.எம். சுவாமிநாதன் கூறி உள்ளனர்.