Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரைசா வில்சன் நடிக்கும் ஃபேண்டஸி திரில்லர் படம் ‘நோவா’..

*ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக உருவாகி உள்ள ‘நோவா’*

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தை தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) .

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார்.

கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவராஜ் சந்திரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.பிரேம்.பி படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை தேவேந்திரன் மேற்கொள்ள, ராம்போ விமல் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்.

*இயக்குநர் மைலோ ‘நோவா’ படம் குறித்து கூறும்போது,*

“ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஒரு ஜானருக்குள் இந்த கதையை அடக்கி விட முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார் ரைசா வில்சன். அதுமட்டுமல்ல கன்னடம், மலையாளம், பெங்காலி என மொழிக்கு ஒரு நடிகரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். பிரபல மலையாள வில்லன் நடிகரான சைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவாளர் கே.வி குகனிடம் பணியாற்றிய கிறிஸ்டோ மற்றும் இசையமைப்பாளர் தமனிடம் பணியாற்றிய யுவராஜ் சந்திரன் இருவரும் இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள். படத்தொகுப்பாளர் பிரேம்.பி இதற்குமுன் டியர் ரவி படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான் நடைபெற்றுள்ளது. ‘நோவா’ படத்தைப் பார்த்துவிட்டு தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. அதனால் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யும் விதமாக தெலுங்கு டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது” என்று கூறினார்.

Related posts

“ஹரா'” படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்

Jai Chandran

நடிகை சரோஜாதேவி திடீர் மரணம்: முதல்வர் மு க ஸ்டாலின், ரஜினி இரங்கல்

Jai Chandran

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா – சைதன்யா..!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend