Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்!

பிரபல இயக்குநர் செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணா- மீரா திருமணம் நடைபெற்றது! மணமக்களை இசையமைப்பாளர் டி.இமான் நேரில் வாழ்த்தினார்.

‘தலைவாசல் ‘ என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடைபெறறது.
தமிழ் சினிமாவில் வணிக உத்தரவாதம் உள்ள இயக்குநர்களின் பட்டியலில் ஓசைப்படாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குநர் செல்வா.
‘தலைவாசல் ‘ படத்தில் அஜித்தை அறிமுகப்படுத்திய இவர், சங்கவி, தலைவாசல் விஜய் ,சிபிராஜ், கீர்த்தி சாவ்லா, சாக்ஷி போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இவர் அஜித்தை வைத்து தலைவாசல் ,அமராவதி படங்களையும் அர்ஜுனை வைத்து கர்ணா , ஆணை,மணிகண்டா படங்களையும் கார்த்திக்கை வைத்து சிஷ்யா ,பூவேலி, ரோஜாவனம் படங்களையும் இயக்கியவர்.
பிரசாந்தை வைத்து ஆசையில் ஒரு கடிதம் ,பார்த்திபன் நடிப்பில் உன் அருகே நானிருந்தால், பார்த்திபன், பிரபு தேவாவை வைத்து ஜேம்ஸ்பாண்டு போன்ற படங்களை இயக்கியவர்.
சிபிராஜை ஸ்டூடண்ட் No1, படத்தில் அறிமுகம் செய்தவர், அதே சிபிராஜை அவரது தந்தை சத்யராஜுடன் இணைத்து ஜோர் படத்தையும் இயக்கியவர்.
புதையல் படத்தில் மம்முட்டியையும் அரவிந்தசாமியையும் இணைந்து நடிக்க வைத்தவர்.
ஜீவனை வைத்து நான் அவனில்லை 1, 2 பாகங்கள், தோட்டா படங்களை இயக்கியவர். முற்றிலும் புதுமுகங்களை வைத்து நாங்க, நாடி துடிக்குது படங்களை இயக்கியவர்.

இப்படி 26 படங்களை இயக்கி முடித்த இவர்,
இப்போது தனது 27 வது படமான வணங்காமுடி யை இயக்கி வருகிறார் .இதில் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கிறார். சிம்ரன் இறுதிச்சுற்று ரித்திகா ,நந்திதா ஆகியோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

சினிமாவுக்கு வரும்முன் சின்னத்திரையிலும் அழுத்தமான முத்திரை பதித்தவர் செல்வா என்பது குறிப்பிடத்தக்கது .

தூர்தர்ஷனில் சித்திரபாவை ,நீலா மாலா ,குறிஞ்சி மலர்,ஆளுக்கொரு ஆசை தொடர்கள் பேசப்பட்ட மிகவும் புகழ் பெற்ற தொடர்களாகும்.
அதே போல் சன் டிவியில் இவர் இயக்கிய சூர்யா, நந்தினி, ரன் தொடர்கள் பேசப்பட்டன.

இவர் பாரதியார் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார். யுனிசெப் நிறுவனத்திற்காக சமூக விழிப்புணர்வு படம் இயக்கியிருக்கிறார். செல்வி ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டி சன் நியூஸ்க்கான இவரது புலன்விசாரணை ஆவணப்படம் பேசப்பட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இவர் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் நூறாவது படமான பார்த்தாலே பரவசம் உருவானபோது இவர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

இப்படித் தனக்கென சாதனைத் தடங்களைப் பதித்து வைத்துள்ள செல்வாவின் இயற்பெயர் செல்வகுமார்.

இவரது மகன் பொறியாளர் ராஜீவ் கர்ணாவுக்கும், பொறியாளர் மிராவுக்கும் சென்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருகம்பாக்கம் ஏகேஆர் மகாலில் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் திருமணம் நடைபெற்றது.

அரசின் கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இத்திருமணம் நடைபெற்றது.

 

Director Selva, Nan Avam Illaai, Thotta, Rajiiv Kana,’

டைரக்டர் செல்வா, நான் அவன் இல்லை, தோட்டா

Related posts

குழந்தைகளின் அழகான உலகை காட்டும் மை டியர் பூதம் – )இயக்குநர் என் ராகவன்

Jai Chandran

Kamal Haasan releases first look of Santhanam-starrer ‘Inga Naan Thaan Kingu’

Jai Chandran

விஜயகுமாரி, டெல்லி கணேஷுக்கு சாதனை விருது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend