Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெரிய ஹீரோயினுக்கு வலைவிரிக்கும் ஆர்.கண்ணன்.!!

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை . சீரியசான விஷயத்தை காமெடி பாணியில் சொல்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன்.
சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அதனால், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் பெரிய ஹீரோயினை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆர்.கண்ணன்.

மசாலா பிக்ஸ் நிறுவனம் 9வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.

ஒளிப்பதிவு  செல்லதுரை (திருட்டு பயலே2, ரவுடி பேபி). பாடல்-வசனம் கபிலன் வைரமுத்து. எடிட்டர் சூர்யா. கலை ராஜ்குமார். ஸ்டன்ட் ஸ்டன்ட் சில்வா. பி.ஆர்.ஓ ஜான்சன்.

Related posts

Animal’s hard-hitting Tamil track ‘Pogaadhe

Jai Chandran

மீண்டும் இணையும் பிரபு தேவா, வடிவேலு கூட்டணி

Jai Chandran

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் 2வது படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend