Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே விஜய் பாண்டி தயாரிப்பில், பி ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி. முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத் தின் அனைத்து பணிகளும் நிறை வடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21-ம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பி ஜி முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள்   ஈ சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

Related posts

Music Director Simon K.King talk on Paper Rocket Success

Jai Chandran

கமல்ஹாசனின் பிறந்தநாளில் ‘சண்டியர்’ படப்பிடிப்பு தொடக்கம்..

Jai Chandran

சொர்ணம் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend