படம்: சிட்டி ஆப் டிரீம்ஸ்
நடிப்பு: ஆரி லோபஸ், ஆல்பர்டோ கே, பவுலினா கெய்டின்
தயாரிப்பு: P 2 பிலிம்ஸ் யு எஸ் ஏ சி
இசை: லிசா ஜெரார்ட்
i
ஒளிப்பதிவு: அலிஜான்ட்ரோ
இயக்கம்:மோஹித் ராம்சந்தினி
பி ஆர் ஒ: சாவித்ரி
ஸ்பெயின் நாட்டில் விவசாய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஆரி லோபசுக்கு அமெரிக்காவில் கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவு. அவனை அமெரிக்கா அழைத்துச் செல்ல புரோக்கர் ஒருவர் வருகிறார். சிறிது காலம் வேலை செய்த பிறகு கால்பந்து வீரராக பயிற்சி அளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்துடன் ஆரியை அமெரிக்கா அழைத்து செல்கிறான். ஆனால் அங்குள்ள துணி தைக்கும் குடோனுக்கு அழைத்துச் சென்று தையல் கூலியாக வேலை செய்ய அடிமையாக விற்கிறான். தான் அடிமையாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த ஆரி அங்கிருந்து தப்பிக்க முயல்கிறான் அவனால் தப்ப முடிந்ததா என்பதை கொடூர சித்ரவதையாக சொல்கிறது கிளைமாக்ஸ்.
இந்திய நாட்டை பற்றி சில இயக்குனர்கள் படமாகவும் டாக்குமென்ட்ரிகளாகவும் வெளிநாடுகளில் காட்டும்போது வறுமை, குடிசை வாழ்க்கை, பிச்சைக்காரர்கள் நடமாட்டம் என்றுதான் காட்டுகிறார்கள். அதே அமெரிக்கா போன்ற நாடுகளை இங்கு காட்டும்போது பணக்கார நாடு, சொர்க்க பூமி என்ற ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவிலும் ஒரு டார்க் சைட் இருக்கிறது. வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்தி. வரப்படும் சிறுவர், சிறுமிகள் கொத்தடிமை களாக நடத்தப்படும் அவலத்தை சிட்டி ஆஃப் டிரீம்ஸ் படம் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மோஹித் ராம்சந்தினி.
படத்தை பார்ப்பவர்கள் அமெரிக்காவிலா இப்படி என்று அதிரும் அளவுக்கு காட்சிகள் அதிரவிடுகிறது. இந்த கதை அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படமக்கப்பட்ட தாக இயக்குனர் தெரிவிக்கிறார்.
உலக படங்கள் என்று அவ்வப்போது சில படங்கள், இயக்குனர்கள் பெயரை பற்றி மேடைகளில் பேசும் சில இயக்குனர்கள் கூறுவார்கள் அந்த வரிசையில் இடம்.பிடிக்கும் படமாக இப்படம் வந்திருக்கிறது. இப்படத்தை இயக்கியவர் அமெரிக்காவில் வாழும் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் கொத்தடிமை சிறுவனாக நடித்திருக்கும் ஆரி லோபஸ் கொத்தடிமை சிறுவனாகவே மாறி வாங்கும் சவுக்கடி, பிரம்படி எல்லாம் உடலை புண்ணாக்கும் அளவுக்கு வலிக்கிறது. எப்படியாவது இந்த சிறுவன் தப்பிவிட மாட்டானா என்ற பதற்றமும் ஒரு கட்டத்தில் அரங்கை ஆக்ரமிக்கிறது.
அமெரிக்காவில் சிட்டிக்கு நடுவே ஒரு பங்களா அந்த பங்களாவிற்குள் சித்ரவதை கூடமாக இயங்கும் தையல் குடடோன் என்று அதிர வைக்கும் அரங்கு திகிலூட்டுகிறது.
சிட்டி ஆப் ட்ரீம்ஸ் – கொத்தடிமை கொடூரம்.