தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர் கே. செல்வமணி கூறியதாவது:
கொரோன 2வது அலை பரவிவருவதை தடுக்க வேண்டிய நிலையில்
வரும் மே 31 வரை படப் பிடிப்பு உள்ளிட்ட திரைத் துறை பணிகள் நடைபெறாது.
இந்த காலகட்டத்தில்
முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர் களுக்கு உதவ முன்வர வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு நடிகர் அஜித் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.