தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு. N. இராமசாமி ( தேனாண்டாள் முரளி) அவர்களுக்கு
இன்று பிறந்தநாள் ( O4– O6– 2021)
வாழ்த்துக்கள்!
“மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்”
என்ற அய்யன் திருவள்ளுவரின் குரளுக்கு ஏற்ப பணியாற்றி வருபவர்தான் திரு. N. இராமசாமி அவர்கள்
தந்தை இராமநாராயணன் அவர்களிடம் திரைப்படங்களை தயாரிப்பது குறித்தும் , படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது குறித்தும் சிறப்பான
சினிமா பாடம் பயின்றவர்.
பல மொழிகளில் கதை கொடுத்தவரும் திரைப்படங்களை இயக்கியவரும்
மற்றும் திரைப்படங்களை தயாரித்தவரும், பெப்சியின் முன்னாள் தலைவரும்,ஐந்து முதல்வர்களிடம் நட்பு கொண்டவரும், இராமநாராயணனின் இனிய நண்பருமான, “எழுச்சி இயக்குனர் ” வி.சி. குகநாதன் அவர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி எடுத்தவர்.
பிலிம்சேம்பரில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று தேர்வானவர்.
அதே பிலிம்சேம்பரில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிபெற்று பணியாற்றி வருபவர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேர்தலில் ஒரு அணி அமைத்து 26 பேருக்கு தலைமை தாங்கி தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட பெருவாரியான வாக்குகள் பெற்று தலைவராக வெற்றிவாகை சூடி இந்த கொரோனா காலத்திலும் கவுன்சிலை திறம்பட நடத்தி வருபவர்.
சிறு முதலீட்டு படங்களை தயாரித்து அதை வெற்றிப்படங்களாக மாற்றிய தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிமஸ் நிறுவனத்தில் அதிகமான பொருட்செலவில் விஜய் நடித்த” மெர்சல் ” படத்தை தயாரித்து உலக அளவில் “. ஆளப்போறான் தமிழன்” என வெற்றியின் சிகரத்தை தொட்டவர்.
தன்னுடன் இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்வும் உயரவேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர்.
தொட்ட காரியமெல்லாம் வெற்றியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ் திரை உலகை மேம்படுத்தி முதலீடு செய்பவர்கள் லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கோணத்தில் சினிமா வியாபாரத்தை விரிவுபடுத்தி தயாரிப்பாளர்கள் பயனடைய செயலாற்றி வருபவர்.
தந்தை அன்றைய தமிழக முதல்வரான கலைஞருடன் நட்பு பாராட்டி திரை உலகுக்கு பல்வேறு சலுகைகள் பெற்றுத் தந்தவர்.
தனயனான இவர் கலைஞரின் மகனும் இன்றைய தமிழக முதல்வருமான
தளபதி
மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் அன்பைப் பெற்றவர்.
தமிழக முதல்வரின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இதயத்தில் இருப்பவர்.
திரைஉலகம் செழிக்கவும், திரை உலகினரின் வாழ்வாதாரம் பெருகிடவும் திட்டங்கள் வைத்து அரசிடம் பேசி தமிழ் திரை உலகை மேம்படுத்தவும் செயல்பட்டு வரும்
திரு.N. இராமசாமி அவர்களுக்கு இனிய
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.
இறைவனின் அருளோடு
வாழ்க பல்லாண்டு!
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
N. விஜயமுரளி
செயற்குழு உறுப்பினர்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
சென்னை.