Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேட்டரி (பட விமர்சனம்)

படம்: பேட்டரி
நடிப்பு: செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக்‌ ஷெட்டி, நாகேந்திர பிரசாத், அபிஷேக், எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், மோனிகா, யோக் ஜேபி

தயாரிப்பு: சி.மாத்தையன்

இசை: சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு : தினேஷ்

இயக்கம்: மணிபாரதி

பி ஆர் ஒ : ஜான்சன்

ஐபிஎஸ் முடித்து விட்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்கிறார் புகழ் (செங்குட்டுவன்). கொலை விசாரணை ஒன்றில் ஆர்வம் காட்டும் அவரை இன்ஸ்பெக்டர் அவமானப்படுத் துகிறார். பொறுத்துக்கொண்டு வேலை பார்க்கிறார். இந்நிலையில் இன்ஸ் பெக்டர் கொலை செய்யப்படுகிறார். அதேபோல் தொழில் அதிபர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இதை போலீஸ் உதவி கமிஷனருடன் சேர்ந்து விசாரிக்கிறார் புகழ். ஒரு கட்டத்தில் அந்த கொலைகளை செய்தவர் புகழ்தான் என்பதை உதவி கமிஷனர் கண்டுபிடிக்கி றார். அவரை கைது செய்ய முயலும் போது தொழில் அதிபரின் மகனை கொன்று விட்டு சரண் அடைவ தாக புகழ் கூறுகிறார். புகழிடமிருந்து தொழில் அதிபர் மகனை உயிரோடு மீட்க உதவி கமிஷனர் போராடுகிறார். இறுதியில் நடந்தது என்ன? புகழ் கொலைகாரராக மாற என்ன காரணம்? என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

மணிபாரதி இயக்கியுள்ள கிரைம் படம். புதிதாக ஒரு கான்செப்ட் கையாண்டு விறுவிறுப்புடன் படத்தை இயக்கியி ருக்கிறார்.

புகழ் கதாபாத்திரத்தில் செங்குட்டுவன் காக்கிச் சட்டைக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் குழம்பும்போது சரியான க்ளு கொடுத்தும் அதை அவர் ஏற்காமல் திட்டுவதால் புகழ் மனம் உடையும்போது பல கீழ் அதிகாரிகளுக்கு இதுபோல்  நேரடி அனுபவமாக இருந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

லிஃப்ட்டில் ஏறும் இன்ஸ்பெக்டரை கதற விடும் மர்மமனிதன் பின்னர் அவரது வாயில் எக்ஸ்பையரியான ரிமோட் கன்ட்ரோல் பேட்டரிகளை வாயில் திணித்து சுட்டுக் கொல்லும்போது மர்ம மனிதன் யாராக இருக்கும் என்ற பரபரப்பு ஏற்படுகிறது. அந்த மர்ம மனிதன் செங்குட்டுவன்தான் என்று சஸ்பென்ஸ் ஓப்பனாகும்போது இரண்டாம்பாதி கதையை இயக்குனர் எப்படி நகர்த்தப்போகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் போதுமான கதையை உருவாக்கி செங்குட்டுவனின் செயலை நியாயப்படுத்துகிறார் இயக்குனர்.

ஹீரோயினாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். பெரிய வேலை இல்லாவிட்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நடமாடுகிறார்.

உதவி கமிஷனராக வருபவர் கவனத்தை கவர்கிறார். அவரது கதாபாத்திரத்திலும் ஒரு சஸ்பென்ஸ் இழையோடுவது பிளஸ்.
சி.மாத்தையன் படத்தை தயாரித்திருக் கிறார். எழுதி இயக்கியுள்ளார் மணி பாரதி ரொம்பவும் நீட்டி முழக்காமல் ஸ்கிரிப்பாக காட்சிகளை கொண்டு செல்வது ஆர்வத்தை தக்க வைக்கிறது.

சித்தார்த் விபின் இசை, தினேஷ் ஒளிப்பதிவு மெருகு.

பேட்டரி- சஸ்பென்ஸ் த்ரில்லர்.

 

Related posts

Mahaan Trailer OUT NOW ..

Jai Chandran

மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் புதிய படம்

Jai Chandran

ரோஜா எம் எல் ஏ கோரிக்கை மனு மீது மத்திய அரசு நடவடிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend