Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆவிச்சி கல்லூரியில் ’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் -2022’

ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் -2022’’ (AVM’s Masterclass-2022) நிகழ்வு தங்கராஜ் (ICAF – பொதுச் செயலாளர்) மற்றும் ஏ எம் வி பிரபாகர் ராஜா, (எம்.எல்.ஏ – விருகம்பாக்கம் தொகுதி) ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட உள்ளது.

’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் – 2022’’ (AVM’s Masterclass-2022) நிகழ்ச்சியானது, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையால் 2022 மார்ச் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், சென்னை ராணி சீதை ஹாலில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ஊடகவியல், கலையியல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் ஆக்கபூர்வ கருத்துகள் கலந்துரையாடப்படும்.

1.  டி. இமான் (இசை இயக்குனர்)
2. தபாண்டிராஜ் (திரைப்பட இயக்குனர்)
3. அனுப் சந்திரசேகரன் (வணிகத் தலைவர் – கலர்ஸ் தமிழ்)
4. சுப்பையா நல்லமுத்து ( தேசிய விருதுப்பெற்ற காட்டு உயிரியல்- ஒளிப்பதிவாளர்)
5. . கே.கே.செந்தில் குமார் ISC (புகைப்பட இயக்குனர்)
6. விஜி ( திரைகதை, வசனம் எழுத்தாளர்)
7. செல்வி. கீதா குரப்பா (தலைமை ஒலி பொறியாளர்)
8. கே. கதிர் (கலை இயக்குனர்)
9. ஏ. ஸ்ரீகர் பிரசாத் (படத் தொகுப்பாளர்)
10. ஜார்ஜ் பயஸ் தரயில் (திரைப்படத் தயாரிப்பாளர்)
11. கௌசிக் நரசிம்மன் (துணைத் தலைவர் – ZEE5 (தமிழ்)
12. ரங்கராஜன்
(VFX இயக்குனர்
நாக் ஸ்டுடியோஸ்)

இத்தகைய தனித்துவமிக்க முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த முன்முயற்சி ஊடக மாணவர் களுக்கு ஒரு அரிய அனுபவமாக இருக்கும், அவர்கள் ஊடக வல்லுநர் களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். ’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் 2022’’ திட்டத்திற்கான பிரதிநிதி பதிவு முற்றிலும் இலவசம். இந்நிகழ்ச்சியில் மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துக்கொள்கின்றனர். இத்தகைய மாணவர் முன்முயற்சி திட்டத்திற்கு தங்களது ஆதரவினை தந்து நிகழ்வு வெற்றிபெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்.,ஏ.வி.எம். கே. சண்முகம் – கல்லூரி செயலாளர்.
முனைவர் .ந.பூமா – கல்லூரி முதல்வர்.
நிகில் முருகன் – PRO

Related posts

12 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறிய நடிகர்

Jai Chandran

டெக்ஸ்டர் ( பட விமர்சனம்)

Jai Chandran

மாணவ மாணவிகளுக்கு சூர்யா உருக்கமான வேண்டுகோள்: தற்கொலை எண்ணம் வேண்டாம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend