Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அவதார் : பயர் அண்ட் ஆஷ் ( ஆங்கில பட விமர்சனம்)

படம்: அவதார் : பயர் அண்ட் ஆஷ்

நடிப்பு: சாம் வொர்த்திங்டன், ஜோ ஷால்டனா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் ப்ரீட்மேன் மற்றும் பலர்.

தயாரிப்பு: ஜேம்ஸ் கேமரூன், ஜோன் லாண்டு

இசை: சைமன் பிராங்க்ளின்

ஒளிப்பதிவு: ரூஷல் கார்பெண்டர்
;
இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன்

பிஆர் ஓ : சுரேஷ் சந்திரா

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற அவதார் படத்தின் 3ம் பாகமாக வந்திருக்கிறது அவதார் பயர் அண்ட் ஆஷ் .

அவதார் நீல வண்ண மனிதர்கள் உலகில் வாழும் ஜாக் (சாம் வொர்த்திங்டன்) மற்றும் நைத்ரி( ஜோ ஷால்டனா) இருவரும் தங்களுடன் வசிக்கும் மனித இனத்தை சேர்ந்த ஸ்பைடர் (ஜாக் சாம்பியன்) என்ற இளைஞனை அவர்களது உலகத்துக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்கின்றனர். அதற்கான ஸ்பேஷ் ஷிப் வரும் நிலையில் அவர்களுடன் அனுப்ப ஆயத்தமாக்கின்றனர். இதற்கிடையில் ஆபத்தான தஷிக் வராங்க் (ஊனா சாப்ளின்) என்ற கொடூர குணம் படைத்த மாற்று இன கூட்டத்தலைவி, ஜாக் மற்றும் நைத்ரி இனத்தவர் வாழும் இருப்பிடத்தை அழிக்கிறாள்.
அவளிடமிருந்து ஜாக் மற்றும் நைத்ரி குடும்பத்தினர் உயிர் தப்பி செல்கின்றனர். ஆனாலும் விடாமல் அவர்களை அழிக்க துரத்துகிறாள் தஷிக். இந்த மோதலில் வெல்வது யார்? ஸ்பைடர் இளைஞன் கதி என்ன ஆனது? ஸ்பைடர் இளைஞனின் தந்தை யார்? போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது .

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்த நிலையில் அதன் மூன்றாவது பாகம் அதாவது அவதார் பயர் அண்ட் ஆஷ் படம் ரசிகர்களுடைய பெருமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது திரைக்கு வந்திருக்கிறது.

ஜேம்ஸ் படம் என்றாலே அது பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றது கற்பனைக்கும் எட்டாத பிரமாண்டங்களை உருவாக்கி காட்டுவதில் வல்லவர். அதை இந்தப் படத்திலும் செய்ய தவறவில்லை. படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்களுக்கு நிறமும் உடல் தோற்றமும் தான் வித்தியாசமாக இருக்கிறது ஆனால் மனித இனத்திற்கு உள்ள பாசம், கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற அத்தனை உணர்வுகளும் ஒரே நேர்க் கோட்டில் இருப்பதுதான் கதாபாத்திரங்களை மனித இனத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.

குடும்பத்தை காப்பாற்ற போராடும் தாய், தன்னை நம்பி வந்த இளைஞனை காப்பாற்ற போராடும் குடும்பம் இவர்களை அழிக்க துடிக்கும் வில்லி கூட்டம் என எல்லாமே ஒரு தமிழ் படத்தின் இலக்கணத்திற்கு ஒத்துப் போகிறது.
அதனால்தான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கும் படங்கள் உலக அளவில் உள்ள ரசிகர்களிடம் உணர்வுபூர்வமான வரவேற்பு பெற்றிருக்கிறதோ என்று தோன்றுகிறது..

3டி முப்பரிமாணத்தில் அவதார் பயர் அண்ட் ஆஷ் படத்தை பார்ப்பது வித்தியாசமான அனுபவம்தான் என்றாலும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக படம் திரையில் ஓடுகிறது, அத்துடன் வசன காட்சிகள் நீண்டு செல்வது சோர்வை ஏற்படுத்துகிறது.

வி எஃப் எக்ஸ், கிராபிக்ஸ், ஏ ஐ என நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்கள் படம் முழுவதும் வியாபித்து ஒரு புதிய உலகத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது என்பது மட்டும் நிஜம்.

அவதார்: பயர் அண்ட் ஆஷ் – நீல வண்ண மனிதர்களுடன் மீண்டும் ஒரு புதிய அனுபவம்.

Review by
K Jatachabdhiran
trending cinemas now.com

Related posts

Vijay Milton’s “Gods and Soldiers” Officially Wrapped..

Jai Chandran

அரிராஜன் இயக்கிய ” ஒழுக்கம் ” குறும்படம்!

Jai Chandran

first look of themohanbabu from SonOfIndia

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend