Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ் (ஆங்கில பட விமர்சனம்)

சீனாவை ஆண்டு வரும் பேரரசியை சிற்றரசர்கள் இணைந்து வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுகின்றனர். துணையாக ஜூலியஸ் சீஸரை அழைக்கின்றனர். சீஸரும் சிற்றரசர்களுக்கு ஆதரவாக படைகளுடன் சீனா வருகிறார். இதற்கிடையில் சிற்றரசர்களின் தாக்குதலிலிருந்து தப்பிச் செல்லும் இளவரசி கவுல்களின் ஆதரவை கோருகிறார். அதீத சக்தி படைத்த கவுல்கள் ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ் (Asterix & Obelix) இளவரசிக்கு ஆதரவு தர சம்மதித்து சீனா புறப்பட்டு செல்கின்றனர். 80 ஆயிரம் படை வீரர்களை கொண்ட சீசரின் படைக்கு முன்பு சீன படையும், ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் சிறையிலி ருந்து தப்பிய பேரரசி சீனா மக்களுடன் படை திரட்டி லட்சக்கணக்கான வீரர்களுடன் சீஸர் படையை சுற்றி வளைக்கிறார். இதனால் சீசர் பின்வாங்குகிறார்.
பிலிப்பி மெக்கெல்லன் ஜூலியன் ஹேர்வ் (Philippe Mechelen, Julien Hervé) ஆகியோரின் சாகச நகைச்சுவைக் கதையில், Asterix ஆகப் படத்தை இயக்கிய Guillaume Canet-டும், Obelix ஆக Gilles Lellouche-சும் நடித்துள்ளனர்.

படம் முழுவதும் வேடிக்கைகளும், சீனாவின் எழில் தோற்றமும் கண்களை கொள்ளை கொள் கின்றன.

இளவரசியை காதலிக்க அஸ்ட்ரிக்சுக்கும் மற்றொரு வருக்கும் நடக்கும் சண்டை கலகலப்பு.
தமிழில் இப்படம் டப்பிங் செய்யப் பட்டிருப்பதால் காட்சிகளை வெகுவாக ரசிக்க முடிகிறது.
ஜூலியஸ் சீஸராக வருபவர் வேடப் பொருத்தம் அருமை கிளியோபாட்ரா என்ட்ரியும் ரசனை.

ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒபிலிக்ஸ் (Asterix & Obelix)!கதாபாத்திரங் களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. அவை, Asterix & Obelix Take on Caeser (1999), Asterix & Obelix: Mission Cleopatra (2002), Asterix at the Olympic Games (2008) & Asterix & Obelix: God Save Britannia (2012) ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப் பான சாகசங்கள் நிரம்பிய Asterix & Obelix: The Middle Kingdom எனும் ஐந்தாவது படம் உருவாக்கப் பட்டுள்ளது. இப்படம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இயற்றப்பட் டுள்ளது. நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்த்து மகிழ ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

Pandiraj, D. imman and Rahman Will Release the Teaser of Memories tomorrow

Jai Chandran

Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days

Jai Chandran

AwarenessThriller movie Papillon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend