Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருண் விஜய் 3 நாள் புரமோஷன் நிகழ்வில் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள “சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் தமிழ்நாடு முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணமாக ரசிகர்களை சந்திக்க பயணித்தார். வழியெங்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பிலும், பேரன்பிலும் மிதந்த அருண் விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், பாண்டிச் சேரி, விழுப்புரம், திருவண்ணா மலை, & வேலூர் ஆகிய நகரங் களில் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 & செப்டம்பர் 2, 2022) நடந்த இந்த பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கு நடிகர்கள் வருகை தந்தது ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆர்பரித்த கூட்டத்தின் நடுவே ரசிகர்களிடம் அன்போடு பழகிய அருண் விஜய் குணம் அனைவரையும் கவர்ந்தது. செப்டம்பர் 16, 2022 அன்று வெளியாகும் “சினம்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

“சினம்” அருண் விஜய் ரசிகர்களுக் கான விருந்தாக இருக்கும் மற்றும் குடும்ப பார்வையாளர்களும் ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. மனதைக் கவரும் பாடல் களும், ரசிகர்களை மயக்கும் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப் படுத்தியுள்ளன.

சினம் படத்தினை Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரித் துள்ளார். இயக்குநர் GNR குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஷபீர் (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மைக்கேல் பி எஃப் ஏ (கலை), ஏ ராஜாமுகமது (எடிட்டர்), ஆர் சரவணன் (கதை-உரையாடல்கள்), ஆரத்தி அருண் (காஸ்ட்யூம் டிசைனர்), மதன் கார்க்கி-ஏக்நாத்-பிரியன்-தமிழனங்கு ( பாடல் வரிகள்), சுரேஷ் சந்திரா-ரேகா டி ஒன்  (மக்கள் தொடர்பு).

Related posts

தனுஷ் படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி

Jai Chandran

BagheeraTrailer hits 2.5M+ views

Jai Chandran

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியுடன் பரிசீலனை: அமைச்சர் உறுதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend