Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரண்மனை 3 பட உரிமையை பெற்ற ரெட் ஜெயன்ட்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.சி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO எஸ்..கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா, Benzz Media CEO ஆர்.மதன்குமார் ஆகியோர் இருந்தனர்.

அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி. தயாரிப்பு Avni Cinemax, Benzz Media. இசை சி சத்யா. வசனம் பத்ரி. திரைக்கதை  வெங்கட் ராகவன். ஒளிப்பதிவு  யூ.கே.செந்தில் குமார்.
படத்தொகுப்பு பெனி ஆலிவர்.
கலை குருராஜ்.பி.
நடனம்  பிருந்தா, தினேஷ்.
சண்டைப்பயிற்சி பீட்டர் ஹெயின், தளபதி தினேஷ. பிரதீப் தினேஷ்.
மக்கள் தொடர்பு ரியாஸ் கே அகமது, சதீஷ் (AIM).

Related posts

வேடுவன் (வெப் சீரிஸ்) விமர்சனம்

Jai Chandran

வைரமுத்துவின் மகாகவிதை நூலுக்கு 1 லட்சம் வெள்ளி பரிசு

Jai Chandran

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend