டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் தாதா சாகேப் விருது பெறும் சூப்பார் ஸடார் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிறந்த நடிகர்களுக்கான தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது சார்பாகவும், ஜனசேன சார்பாகவும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 45 வருடங்களாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்த் இந்த விருதுக்கு அனைத்து வகையிலும் தகுதியானவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூத்த சகோதரர் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த ‘பந்திபோட்டு சிம்ஹாம்’ மற்றும் ‘காளி’ படங்கள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. ரஜினிகாந்த் மேலும் நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஜனசேனா தலைவர், நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.