படம்: ஆன்டிஇண்டியன்
நடிப்பு: ப்ளுசட்டை மாறன், டத்தோ ராதாரவி, நரேன், ”வழக்கு எண்” முத்துராமன், பாலா, துரை சுதாகர், ஜெயராஜ், சார்லஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, பசி சத்யா,
தயாரிப்பு: மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா
இசை: ப்ளு சட்டை மாறன்
எடிட்டர் : ஆர்.சுதர்சன்
ஒளிப்பதிவு: கதிரவன்
இயக்கம்: ப்ளு சட்டை மாறன்
பி ஆர் ஓ: ஏ.ஜான்
”டேய் ப்ளு சட்டை உனக்காக எவ்ளோ நேரண்டா காத்துட்டிருக்கறது.
உன்ன கூட்டிட்டு வரச்சொன்னாங்க வா.. வா.. உனக்காக எல்லாரும் அருவாள தீட்டி வச்சிட்டிருக்காங்க” என்று ஆன்டிஇண்டியன் படத்துக் கான டிரைலரில் சின்னதா கட்டிங் விட்டு, பெரும்பாலான படங்கள யூடியூப்ல் கிழிச்ச ப்ளுசட்டை மாறன் படம் எப்படா வரும் அத கிழிக்க றதுக்கு எவ்ளோ பேர் தயாராக இருக்காங்க என்று கோடிட்டி காட்டிய மாறனின் படம் ஒரு வழி சென்சார், மற்றும் எதிர்ப்புகளை தாண்டி தியேட்டருக்கு வந்துடுச்சி.. யார் யார் எப்படி கிழிக்கப் போகிறார்கள் என்பதை சோசியல் மீடியாவில் பார்த்துக்கலாம். இப்போது அப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சென்னை சிட்டில மீனவ பகுதியில் வாழும் அரசியல் கட்சிகளுக்கு விளம்பரங்கள் வரையும் ஓவியர் பாஷாவை யாரோ படுகொலை செய்து விடுகிறார்கள். கொலை செய்தது யார் என்பதை ஒரு பக்கம் போலீஸ் தேடும் நிலையில் பாஷா உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. பாஷாவின் தந்தை இப்ராகிம், தாயோ சரோஜா. ஒரு கட்டத்தில் இந்த சரோஜாவை லூர்துமேரி என்று கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர். பாஷா உடலை அடக்கம் செய்ய மசூதி கொண்டு செல்லும்போது தாயார் இந்து என்பதால் பிணத்தை புதைக்க அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். இதையறிந்த இந்து அமைப்பினர் பிணத்தை இந்து மயானத்தில் புதைக்க எடுத்து செல்ல அங்கு இஸ்லாம் மதத்தை சேர்ந்த பாஷா உடலை இந்து மயானத்தில் புதைக்க முடி யாது என்று சட்டம் பேசி திருப்பி அனுப்புகின்றனர். பின்னர் பிணத்தை நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்று கிறிஸ்த்தவ அமைப்பினர் முன்வருகின்றனர். இந்நிலை யில் மீண்டும் இஸ்லாம் மதத்தினர் பாஷா உடலை நாங்களே முறைப்படி அடக்கம் செய்கிறோம் உடலை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கின்றனர். இடைத்தேர்தல் நேரத்தில் இப்பிரச்சனை எழுவதால் மதக்கலவரம் ஏற்படுத்தி தேர்தலில் ஜெயிக்க எதிர்க் கட்சியும், தேர்தலை நிறுத்த ஆளும் கட்சியும் சதிதிட்டம் தீட்டுகின்றன. அதன்படி மதக் கலவரம் நடக்கிறது, பாஷாவின் உடலை யார் அடக்கம் செய்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.
ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு நடக்கும் அரசியல் எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்பதை அப்பட்ட மாக தோலுரித்திருக்கிறார் இயக்குனர் பளு சட்டை சி. இளமாறன்.
மாறன் படம் வரட்டும் அவர் நடிப்பை கிழிக்கலாம் என்று காத்திருந்தவர் களுக்கு சத்ய ராஜ் பாணியில் அல்வா கொடுப்பதுபோல் படம் முழுவதும் செத்த பிணமாக நடித்து அனைவரின் வாயையும் அடைத்திருக்கிறார் மாறன்.
மாறன் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்வதும் அடக்கம்செய்ய முடியாமல் இரண்டு முறை திரும்ப வீட்டுக்கே கொண்டு வரும் கனமான காட்சிகளை கூட காமெடியாக்கி, அதில் உள்ள மத அரசியலை வெளுத்திருப்பது அருமை.அரசியல்வாதிகளாக நடித்தி lருப்பவர்களும் இந்த வசனம் பேசினால் வம்பு வருமா என்று கிஞ்சித்தும் அஞ்சாமல் துணிச்சாலாக பேசி ஜாதி அரசியலுக்கு சாட்டை அடி கொடுக்கின்றனர்.
”மதத்தை நம்பறவன் எவனும் கோச்சிக்க மாட்டான், மதத்தை நம்பி பிழைப்பு நடத்துறவன் தான் கோவிச்சிக்குவான்” என்று பொதுவாக சுழற்றும் சாட்டை சிலரின் கோபத்தை தூண்டி விடும் என்பதில் சந்தேகமில்லை.
முன்னெல்லாம், ”பஞ்சாயத் lதுக்கு ஒரு டிவி இருக்கும் அதுல செய்தி ஓடும். இப்ப எங்க பாத்தாலும் டிவி எல்லாத்திலும் பஞ்சாயாத்து தான் நடக்குது” என்று போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன் பேசு வசனம் அப்ளாஸ் பெறுகிறது.
கூடவே ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களையும் விட்டு வைக்காமல், ”நம்ம மக்கள பத்தி தெரியாதா? செருப்பால அடிச்சிட்டு கையில கருப்பட்டி கொடுத்தா நக்கிகிட்டே போய்யிடுவானுங்க” என்று செம ஊசி ஏற்றுகிறார்
மாறானின் தாயாராக நடித்தி ருக்கும் மூதாட்டியின் யதார்த் தமான பேச்சில் பொதுவுடமை பிரதிபலிக்கிறது. எந்த மத முறைப்படி பிணத்தை புதைப்பது என்று அதிகாரி கேட்பதற்கு பதில் கூறும் மூதாட்டி.’என்னய இந்த ஊர் மக்கள்தான் காப்பாத்தறாங்க யார் மனசும் நோகாம, நீங்களே ஒரு முடிவு பண்ணி செய்ங்க” என்று சொல்லும்போது எம்மத முறைப்படி செய்தாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்பதை இயல்பாக சொன்னாலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அரசியல்வாதிகள் பலர் யோக்கியமானவர்கள் இல்லை என்று நேரடியாகவே காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது.
முதலமைச்சராக டத்தோ ராதாரவி, போலீஸ் அதிகாரி களாக ஆடுகளம் நரேன், முத்துராமன், மத தலைவர் களாக வரும் கதாபாத்திரங்கள் அவரவர் வேலையை கச்சித மாக செய்திருக்கின்றனர்.
இப்படி இன்னும் சில படங்கள் இதுபோல் வந்தால் மதத்தின் பெயரால் யாராலும் அரசியல் செய்ய முடியாத நிலை நிச்சயம் வரும்
கானா பாடல் பாடும் இளைஞர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர்.
எழுத்து இயக்கம் ஆகியவற்றுடன் இசை பொறுப்பையும் ப்ளுசட்டை மாறனே ஏற்று எல்லா தளத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
வசனங்களில் எதார்த்தமாக பேசிக்கொள்வதுபோல் வந்து விழும் ”த்தா’ வசனங்கள் திடுக்கிட வைக்கிறது.
கதிரவன் தெளிவான ஒளிப் பதிவு செய்திருக்கிறார். குழப்பம் ஏற்படுத்தும் கதையை கச்சிதமாக வெட்டி ஒட்டி எளிதாக புரியும்படி நறுக்காக கத்தரிபோட்டிருக் கிறார் எடிட்டர் ஆர்.சுதர்சன்.
ஆன்ட்டி இண்டியன் – மதங் களை வைத்து அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளை துண்டாடும் பட்டாக்கத்தி
By க.ஜெயச்சந்திரன்.
=============