Trending Cinemas Now
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான ‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று தற்போது அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும். முதல் பார்வையில் காட்டப்பட்டுள்ள படத்தின் உலகத்தால் கட்டுண்டுள்ளவர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை.

இப்படத்திற்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உடன் மீண்டும் இணைந்துள்ள அல்லு அர்ஜுன், இந்த அகில இந்திய திரைப்படத்தின் முதல் பார்வை மூலம் தனது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார்.

படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கு படத்தின் கதையை சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர், “நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். ‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம். சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்

ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா விவரிக்கிறது. இப்படத்திற்காக முதல் முறையாக அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இந்த அகில இந்திய படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும்.

Related posts

Kuzhali wins 3 awards at Mokkho Film Festival

Jai Chandran

கொரோனா ஒழிப்பு: நாளை ஊரடங்குக்கு கமல் ஆதரவு

Jai Chandran

நாற்காலி: எம்ஜிஆர் புகழ் பாடும் எஸ்பிபியின் நெஞ்சமுண்டு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend