அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்திருக் கிறார். அவர் கூறியதாவது:
சமய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் இந்திய மக்களுடன் ஒன்றியிருக்கும் பண்டிகையான தீபாவளி திருநாளில் புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்களை சுற்றத்தாருடன் பகிர்ந்து உண்டு, வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசுகளை வெடித்து, குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்களோடு மகிழ்வுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வாரத்தில், பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் பட்டாசு தொழில் நசிந்துள்ளது. வியாபாரம் குறைவால் பட்டாசு தொழிலாளர் களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்குள் ளாகியுள்ளது. தேசமெங்கும் பட்டாசுகள் மூலம் மக்களின் வாழ்வில் மத்தாப்பு போன்ற புன்னகை மலர செய்த அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, தமிழக அரசு உதவ வேண்டும்.
இனிய தீப ஒளித்திருநாள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை வழங்கட்டும். சமத்துவத்திலும், சமூகநீதியிலும், சமதர்மத்திலும், சமுதாயங் களுக்கிடையிலான சுமூக நல்லுறவு உள்ளங்களால் ஒன்றுபடட்டும்.
இருள் அகன்று, ஒளி பிறக்கும் நாளில், அனைவரது வாழ்வின் சிக்கல்களும், தீமைகளும் அகன்று, நன்மைகள் சிறக்கும் நன்னாளாய் அமையட்டும் என தெரிவித்து, என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் உலகெங்கும் தீபஒளித்திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் மக்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரா..சரத்குமார் கூறியுள்ளார்.