பிரபல இளm நடிகை யாஷிகா ஆனந்த் அமெரிக்காவிலிருந்து வந்த தனது தோழி வள்ளி மற்றும் நண்பர்களுடன் நேற்று புதுச்சேரி சென்றுவிட்டு இரவு காரில் சென்னை திரும்பிக்கொண் டிருந்தார்.
மகாபலிபுரம் அருகே குள்ளேரிக் காடு ஈசிஆர் பகுதியில் கார் வேகமாக வந்துக் கொண்டிருந்த போது சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில் கார் தலைகீழாக கவிழந்தது. காரில் இருந்த யாஷிகா உள்ளிட்ட அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து நடந்ததை அறிந்த பொதுமக்கள் காயம் அடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் யாஷிகாவின் அமெரிக்க தோழி வள்ளி செட்டிபவனி பரிதாபமாக உயிரிந்தார். யாஷிகா. உள்ளிட்டவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யாஷிகா விபததில் சிக்கியது குறித்துதகவல் அறிந்து அவரது தந்தை வெளியூரிலிருந்து சென்னை புறப்பட்டு வருகிறார்.