Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை நமீதாவின் ஒ டிடி தளம் ’நமீதா தியேட்டர்’

நமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் . இந்த ஒடிடி தளத்தை தொடங்குகிறார் நடிகை நமீதா . அது பர்றிய விவரம் வருமாறு:

கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் ஒடிடி (OTT) தளங்கள் துவங்கப்பட்டுவருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பரந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. எண்ணற்ற ஒடிடி தளங்களில் வெகு சில தளங்கள் மட்டுமே புதுமையான தரமான கதைகளை ஒளிபரப்பும் தளங்களாக இருந்து வருகின்றன.

தரமான ஒடிடி  தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் ஒடிடி தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதா அவர்களும் நிர்வாக இயக்குநராக திரு. ரவி வர்மா அவர்களும் உள்ளனர்.

இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது…

திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதை திருப்பி அளிக்க நினைத்தேன். பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான் திரு. ரவி வர்மா அவர்களை சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து, பல வித கார்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார். அவர் தான் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு ஒடிடி தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்கு தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது. புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். மேலும் சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களை திரையிடலாம். நாங்கள் இத்தளத்தை துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம். இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் திரு. ரவி வர்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ரவி வர்மா கூறியதாவது..,

“நமீதா தியேட்டர்ஸ்” எனும் இந்த கனவு பயணத்தை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். முற்றிலும் தனித்த வகையிலான தராமான கதைகள் எந்த மீடியா அல்லது சினிமாவில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் நான் ஒரு தனித்த ஐடியாவை உருவாக்கினேன் அதற்கு ஆதரவளித்து முதன்மை தூதுவராக நமீதா சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்த வாய்ப்பு கடந்த 27 வருடங்களாக Sunshine Casting Agency நடத்தி வரும் எனது நண்பர், நடிகர், நடிகர்கள் தேர்வாளர் திரு. மனோஜ்கிருஷ்ணா அவர்கள் மூலம் தான் இது அனைத்தும் சாத்தியமானது. அவரும் நானும் 30 வருட கால நண்பர்கள். நடிகை நமீதா அவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், நமீதா தியேட்டர்ஸ் தளம் குறித்து அவர் தந்த ஐடியாக்கள் மிகவும் மதிப்பு மிகுந்ததாகவும் இருந்தது. அவருக்கு எல்லா வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. திரு.மனோஜ்குமார் அவர்கள் நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் Chief Administrative Officer ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சினிமா மீதான தீவிரமான காதல் ஈடுபாடு எங்களுக்குள் ஒரே அளவில் இருந்தது. இருவருக்கும் 40 வருட கால அனுபவம் சினிமா துறையிலும், வணிக துறையிலும் உள்ளது. எங்கள் இருவரது பங்களிப்பும் நமீதா தியேட்டர்ஸ் தளத்தை மிக சிறப்பாக வழிநடத்தும் என நம்புகிறேன். மிக விரைவில் முதல் பகுதி கதைகள், திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு நமீதா, ரவிவர்மா கூறினர்.

Related posts

Vishal Celebrating 75th Independence Day

Jai Chandran

Ajith’s Valimai gets the biggest OTT opening ever with 100 million streaming minutes.

Jai Chandran

‘8 Thottakkal’ fame Vetri to act in ‘Bumper’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend