Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி படுகாயம் ; வாயில் அறுவை சிகிச்சை

இசை அமைப்பாளராக இருந்து திரைப்பட நடிகரானவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக் காரன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிபடங்களாக அமைந்தன.

தற்போது பிச்சைக்காரன்2 , படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வந்தது.  அங்குள்ள லங்கா தீவு கடற்கரை பகுதியில் வேகமாக படகு ஓட்டிச் சென்று ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிரே வந்த மற்றொரு படகு மீது விஜய் ஆண்டனி படகு மோதியதில் பலத்த காயம் அடைந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது வாய் பகுதி சிதைந்தது. ஒரு சில பற்களும் உடைந்தன.

இதில் மயக்கமடைந்த விஜய் ஆண்டனி  தண்ணீரில் மூழ்கினார். இந்த சம்பவம் படக் குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். வாய் பகுதியில் பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதற்கு சென்னை சென்று சிகிச்சை செய்துகொள்வ தாக கூறிவிட்டார். இதையடுத்து விஜய் ஆண்டனி மலேசியாவிலி ருந்து சென்னை திரும்புகிறார். இங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சேர் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய சம்பவம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

சிதம்பரம் ரெயில்வே கேட் படம் பிப்ரவர் 5ல் ரிலீஸ்..

Jai Chandran

5 இயக்குனர்கள் இயக்கிய 5 கதைகள் “வவுல்ஸ் “..

Jai Chandran

Ramesh P Pillai‘s next project MOTION POSTER from tomorrow

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend