Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

5 மொழியில் ஒரே நாளில் ’மின்னல் முரளி’ டீஸர் வெளியானது.. விஜய்சேதுபதி, கீர்த்தி சுரேஷ் அபிஷேக், ராணா ரிலீஸ்..

டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான “மின்னல் முரளி” படத்தின் டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டது வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனம் !
பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் மிகப் பெரும் படைப்பாக , நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ படமான “மின்னல் முரளி” படத்தின் விறுவிறு, அதிரடி டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது. மலையாள மெகா ஸ்டார்களான ப்ரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பகத் பாசில் மலையாள மொழி டீஸரை வெளியிட, பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அர்ஜீன் கபூர் ஹிந்தி மொழி “மிஸ்டர் முரளி” டீஸரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ் டீஸரை வெளியிட்டனர். தெலுங்கு மொழியிலான “மெருப்பு முரளி” டீஸரை ராணா டகுபதி வெளியிட, கன்னட சென்ஷேசனல் ஸ்டார் யாஷ் “மிஞ்சு முரளி” கன்னட டீஸரை வெளியிட்டார். இந்தியாவின் அனைத்து மொழி சினிமாத்துறையில் இருந்தும் மிகப்பெரும் நட்சத்திர கூட்டம் ஒரு படத்திற்காக இணைந்து, டீஸரை வெளியிட்டுள்ள, பெரும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல், போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Block buster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப் பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழி களில் நேரடியாக வெளியிடுகிறது. மாநிலம் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் மிகப்பெரிய அடுத்த கட்ட வளர்ச்சியை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனம் இப்படம் மூலம் முன்னெடுத்துள்ளது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டீஸர் வெளியான சில மணி நேரங்களில், அனைத்து மொழிகளிலும், ரசிகர்களிடம் பலத்த பாரட்டுக்களை குவித்து வருகிறது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில், ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப் படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார். இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத் தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத் துள்ளார்.
இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுப வத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.

“மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்களில் மற்றும் இதுவரை கேமராவே பார்த்திராத லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது. உயர்தரமிக்க நடிகர் குழுவான குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பி. பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப குழுவில் மிகத் திறமை வாய்ந்தவர்களை கொண்டு இயங்கி வருகிறது “மின்னல் முரளி” திரைப் படம். படத்தின் கடும் சவால் மிகுந்த கலை இயக்கத்தை, வடிவமைக்கிறார் கலை இயக்குநர் மனு ஜகத். அனைத்து வகையான இசையிலும் அசத்தும் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக் கிறார். பாடலாசிரியர் மனு மஞ்சித் பாடல் வரிகள் எழுத, இப்படத்தின் எழுத்து பணிகளை செய்துள்ளனர் அருண் அனிருதன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ. படத்தின் படத்தொகுப்பை லிவிங்ஸ்டன் மேத்யூ செய்துள்ளார். விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வை யாளராக ஆண்ட்ரு டி கிரஸ் செய்கிறார். ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் செய்துள்ளார். ஹாசன் வண்டூர் மேக்கப் செய்ய, ஜே மெல்வி உடை வடிவமைப்பு செய்துள்ளார். சூப்பர் ஹீரோவுக்கான தனித்த உடை வடிவமைப்பை தீபாலி நூர் செய்துள் ளார். அதிகாரப்பூர்வ போஸ்டரை டிசைன் செய்துள்ளார் என்.டி ப்ரதூள். கருத்து வடிவமைப்பை பவி சங்கர் செய்துள்ளார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க காத்திருக்கிறது படக்குழு. தற்போது போஸ்ட்புரடக்‌ஷன் பணிகள் கொரோனா எச்சரிக்கைகள் பின்பற்றப் பட்டு தீவிரமாக நடைபெற்று வருகி றது.

https://youtu.be/2JzkRhyLq8M

https://youtu.be/2JzkRhyLq8M

Related posts

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியம்: சரத்குமார் அரசுக்கு வலியுறுத்தல்

Jai Chandran

தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

Jai Chandran

Kichcha Sudeep: Vikrant Rona First Glimpse:

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend