Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார் கேட்ட மகளுக்கு பாடம் கற்று தந்த நடிகர் ரகுமான் !

உலகளவில் பிரபலமான நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகள் ஒரு அழகான பாடம் கற்று தந்துள்ளார்.

நடிகர் ரகுமான், மகள் கல்லூரி படித்து வருகிறார். 18 வயதை கடந்தவுடன் கார் ஓட்ட லைசென்ஸ் பெற்று தனது தந்தையிடம் தனக்கு சொந்த கார் வேண்டும் எனக் கேட்டுள்ளார். எந்த தந்தையும் தன்னால் முடியுமென்றால் தனது குழந்தைகளுக்கு உலகத்தையே வாங்கி தருவார்கள் ஆனால் நடிகர் ரகுமானோ தன் குழந்தையை நல்லபடி வளர்க்க வேண்டுமென்கிற முனைப்பில் தனது மகளுக்கு ஒரு டெஸ்ட் வைத்துள்ளார். முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு கார் பாதியில் நின்றுவிட்டால் காரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் பற்றி அவர்களுக்கே தெரியும் பஞ்சர் ஆனாலும் அவர்களே கார் டயரை மாற்றுவார்கள் ஆனால் இக்காலத்தில் எல்லோரும் அடுத்தரவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். அதே போல் தன் குழந்தையும் வளரக்கூடாதென முதலில் கார் டயரை தனி ஆளாக மாற்றி காட்டு உனக்கு கார் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

ரகுமான் மகளும் தன் தந்தையின் சவாலை ஏற்று, தானே காரின் டயரை மாற்றியுள்ளார் அவர் கார் டயரை மாற்றும் வீடியோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் நடிகர் ரகுமான். இப்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் ரகுமானின் செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

வீடியோ லிங்க்

https://www.instagram.com/reel/CZYzEZsIJrg/?utm_medium=share_sheet

Related posts

நடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

ஏ.ஆர்.ரஹமானின் மூப்பிலா தமிழ் தாயே பாடல் ஆல்பம் வெளியீடு

Jai Chandran

காதலிக்க நேரமில்லை (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend