Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி, தனுஷுக்கு நாசர் வாழ்த்து

தாதா சாகேப் விருது பெற்ற ரஜனகாந்த், தேசியவிருது பெற்ற தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

வணக்கம்!
அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான, தாதா சாகேப் பால்கே விருதினை அவர் பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். அவரது கலைப்பயணம் மேலும் தொடர
அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் இன்று தேசிய விருது பெற்ற கலைஞர்களான
சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோருக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு நாசர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் ஆகவில்லை..

Jai Chandran

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்: கமல் பேச்சு

Jai Chandran

Anbulla Gilli have found immense response instantly.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend