படம்: ஆயிரம் பொற்காசுகள்
நடிப்பு: விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியன், பாரதி கண்ணன், ரிந்து ரவி, தமிழ் செல்வி, வெற்றி வேல், பவன்ராஜ், ஜிந்தா கோபி, செம்மலர் அன்னம்,
தயாரிப்பு: ராமலிங்கம்
இசை: யோகன் சிவநேஸ்
ஒளிப்பதிவு: பானு முருகன்
இயக்கம்: ரவி முருகையா
பி ஆர் o: நிகில் முருகன்
கழிவறை கட்டுவதற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது.. வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று சொல்லி சரவணன் அரசிடம் நிதி பெறுகிறார். அந்த நிதியை கொண்டு கழிவறை கட்டாமல் சொந்த செலவுக்கு பயன்படுத்தி விடுகிறார். ஆனால் கழிவறை கட்டியது போல் கணக்கு காட்டு கிறார். இந்நிலையில் தனது தாய்மாமன் சரவணனை பார்ப்ப தற்காக விதார்த் அவரது வீட்டுக்கு வருகிறார். கழிவறை கட்டும் பணத்தை சரவணன் ஏமாற்றிய விஷயம் வெளியே தெரிய வந்ததும் கண்டிப்பாக கழிவறை கட்டியாக வேண்டும் என்று ஊர் மக்கள் நிர்பந்திக்கிறார்கள் . வேறு வழி இல்லாமல் அவர் கழிவறை கட்ட முடிவு செய்து விதார்த்துடன் சேர்ந்து வீட்டில் பள்ளம் தோண்டு கிறார். அப்போது அவருக்கு சோழர்கால தங்க காசுகள் கொண்ட புதையல் ஒன்று கிடைக் கிறது. அதைக்கண்டு இன்ப அதிர்ச்சி அடையும் சரவணனும் விதார்த்தும் புதையலை யாருக்கும் தெரியாமல் தாங்களே வைத்துக்கொள்ள முயற்சிக்கின் றனர். ஆனாலும் எப்படியோ அந்த விஷயம் வெளியில் தெரிந்து விடுகிறது. இதையடுத்து புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களா? இருவரும் கழிவறை கட்டினார்களா? புதை யலை மறைத்த குற்றம் என்ன வானது என்பது பல்வேறு கேள்வி களுக்கு படத்தின் கிளைமாக்ஸ் கலகலப்பாக பதிலளிக்கிறது.
பருத்தி வீரன் சரவணன் சமீப காலமாக மாறுபட்ட கதாபாத்திரங் களில் நடித்துக் கொண்டிருக்கி றார். எந்த வேடத்தில் வந்தாலும் தனது முத்திரையை பதித்துச் செல்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பருத்தி வீரனில் கார்த்தி யுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த சரவணன் இந்த படத்தில் விதார்த்துடன் சேர்ந்து காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.
“மைனா” படத்திற்கு பிறகு விதார்த் பெரிய அளவில் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பல வாய்ப்புகளை அவரே தவற விட்ட தாலும் ,பின்னர் எதிர்பார்த்த அளவுக்கான வாய்ப்புகள் கிடைக் காத நிலையும இருந்தது. ஒரு கட்டத்தில் தனது போக்கை உணர்ந்து தற்போது தனக்கேற்ற வேடங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் விதார்த் நடிப்பில் வெளியான இறுகப்பற்று, குவிக்கோ போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப் படுத்தி அவருக்கென ஒரு தனி பெயரை தக்க வைத்திருக்கிறார். . அந்த வரிசையில் ஆயிரம் பொற்காசுகள் படமும் ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என நம்பலாம்.
சோழர் காலத்து பொற்காசுகள் புதையலாக கிடைத்தவுடன் அந்த ரகசியத்தை மறைப்பதற்காக சரவணன் விதார்த் செய்யும் கூத்து வயிற்றை பதம் பார்க்கி றது. இவர்களால் இப்படி எல்லாம் காமெடி செய்ய முடியுமா என்று நம்ப முடியாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
சரவணனுக்கு இது ஒரு புதிய மைல்களை ஏற்படுத்தி தரும் என்று நம்பலாம்.
அருந்ததி ராயர் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அவர் விதார்த்தை கண்டதும் காதல் என்ற அளவில் காதலிக்க தொடங்கி விடுகிறார். இருவரும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ள திட்டமிடுவதும் பின்னர் அதன் எதிர் விளைவும் மற்றொரு நகைச்சுவை சீனாகவே மாறிவிடுகிறது.
வழக்கமாக பிரதான கதாபாத்திரங் களுக்கு மட்டும்தான் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் சகபாத் திரங்களுக்கு அவ்வளவு முக்கியத் துவம் இருக்காது. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை பள்ளம் தோண்ட வரும் ஜார்ஜ் மரியன், பவுன்ராஜ் ஊர் தலைவர் கர்ண ராஜா மற்றும் அன்னம் பாரதி கண்ணன், வெற்றிவேல் என எல்லோருமே தங்களது பாத்திரங் களை தக்க வைத்துக் கொள்கி றார்கள்.
இயக்குனர் ரவி முருகையா இப்படத்தை கலகலப்பு என்ற கருவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார். இது இந்த நேரத்திற்கு தேவையான படம் என்றுதான் சொல்ல வேண்டும் மிக்ஜாம் புயல், சென்னையில் வெள்ளம், தென் தமிழகத்தில் வெள்ளம் என்று மக்கள் படாத பாடு பட்டு சோகத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கவலையை மறந்து சிரிக்க ஒரு வாய்ப்பாக இந்த படம் அமைந் திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
காமெடிக்கான இசையை யோகன் சிவநேஸ் அமைத்திருக்கிறார்.
ராமலிங்கம் படத்தை தயாரித்திருக்கிறார்.
“ஆயிரம் பொற்காசுகள்” அரங்கில் சிரிப்பு சில்லறையை சிதறவிடும்