சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பழங்குடினியினருக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் என்பவர் அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக தற்போது கு.சின்னதுரை திமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்டு உள்ளார்.
ஜீவா ஸ்டாலின் ஆதிதிராவிடரா? என்பதில் சர்ச்சை எழுந்தது. ஆத்தூர் அருகே புங்கவாடி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாரிமுத்து உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் ஒரு புகார் மனுவில் அளித்தனர். அதில் ஜீவா ஸ்டாலின் குறிபிட்ட வகுப்பை சார்ந்தவர் என்று போலியாக சான்று வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்தே ஜீவா ஸ்டாலின் நீக்கப்பட்டு சின்னதுரைyயை புதிய வேட்பாள ராக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.