Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவுதம் கார்த்திக் சேரன் நடிக்கும் புதிய படம் 2வது கட்ட படப்பிடிப்பு தீவிரம்..

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.

ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் பி..ரங்கநாதன் கூறியதாவது … “ஆனந்தம் விளையாடும் வீடு” படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையைஎன்னிடம் கூறியதுபோலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார். குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடுமப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதுவும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளை போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக்குழுவை கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையை கூட்டியுள்ளது. பொதுமுடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு, செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி .ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்த் நடித்துள்ளது.

Related posts

இந்தியன்2 படத்தில் 11 நிமிட காட்சிகள் குறைத்து விறுவிறுப்பு அதிகரிப்பு

Jai Chandran

Jithan Ramesh’s risk in a cave for 22 days*

Jai Chandran

அன்பு ரகுமான்! அஞ்சற்க..வைரமுத்து ஆறுதல்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend