Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துணிந்த பின் படத்தில் நடித்த அனுபவம் பற்றி அதர்வா

தென்னிந்திய சினிமா வில், முன்னணி நடசத்திர மாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.  விரைவில் வெளியாக வுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப் படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள “துணிந்த பின்”  கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.  தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கி யுள்ள  “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியா கிறது.

இயக்குநர் சர்ஜூன் KM உடன் இணைந்து பணி புரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத் திரத்தில் நடித்தது பற்றி,  நடிகர்  அதர்வா முரளி கூறியதாவது..

இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை  பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை  சொல்லப்போகி றார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.  இந்தப் படம் தைரியத்தை அடிப்படை யாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின்  உச்சிக்கு சென்றது.  நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது  ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம்  எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர்  சர்ஜுன் உடன் பணி புரிந்தது  மற்றும்  வெற்றி என்ற கதாபாத் திரத்தை செய்தது மிகவும் அற்புதமான  அனுபவமாக இருந்தது.

“நவரசா” மனித  உணர்வுளில்   9 ரசங்களான,  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு,  ஒன்பது வெவ் வேறு அழகான கதைகளை கூறும்  ஆந்தாலஜி திரைப் படமாகும். தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியா வின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது. Justickets  நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை  தயாரித்துள்ளனர்.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள்  தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்

Related posts

அல்லுவின் AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி. சாதனை

Jai Chandran

ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

Jai Chandran

ராமர் பாலம் பட விமர்சனம் (Ram Sethu Movie Review)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend