Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்..

இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்..

அமிதாப், கமல் இரங்கல்..

லைப் ஆப் பய் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் இந்தி நடிகர் இர்பான்கான். இந்தியில் டி டே, லன்ச்பாக்ஸ் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் . அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை இறந்தார். அவருக்கு 54 வயது. இர்பானுக்கு மனைவியும் 2.பிள்ளைகள் உள்ளனர்.

ஏற்கெனவே இர்பான் கடந்த 2018ம்ஆண்டு மூளையில் கேன்சர் கட்டி சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று திரும்பினார். பிறகு ஆங்கிரிஸி மீடியம் என்ற படத்திலும் நடித்தார்.இர்பான் கான்.

இர்பான் மறைவுக்கு நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் கூறும்போது, ‘சிறந்த நடிகர் இர்பான் மறைவு சோகத்தை அளிக்கிறது. இது இறக்கும் வயதில்லை அவர் இன்னும் நீண்ட நாள் வாழக்கூடிய தகுதி பெற்றவர்’ என தெரிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்தான் இர்பான் தாயார் அவரது சொந்த ஊரில் மரணம் அடைந்தார் .
கொரோனா ஊரடங்கால் தாயார் இறுதி சடங்கில். இர்பான் பங்கேற்கவில்லை நேரில் பங்கேற்கவில்லை. வீடியோ மூலமே இறுதி சடங்குகளை கண்டு அழுதபடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

#Film actor Irfan Khan dies at 54
#இர்பான்கான்

Related posts

30 வருடம் படுக்கையில் இருந்த நடிகர் பாபு மரணம்

Jai Chandran

ஐந்தாம் வேதம் ( வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

Selvaraghavan Joins The Cast of Beast.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend