Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஓம் (பட விமர்சனம் )

படம்: ஓம் (OM)

நடிப்பு: தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீ லீலா, நஸ்ருதீன் ஷா
தயாரிப்பு: தனுஷ், ஸ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜாக்மாக் ஆர் டேக் ஸ்டுடியோஸ் வொண்டர் பார் பிலிம்ஸ்

இசை: சாய் அபயங்கர்

ஒளிப்பதிவு: கே எழில் அரசு

இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி
பி ஆர் ஓ : AIM சதீஷ், ரியாஸ்

கதை: ஆந்திரா காட்டுப்பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளிகள் விலை மதிப்புமிக்க செம்மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். சர்வதேச செம்மரக்கட்டை கடத்தல் கூட்டம் இந்த தொழிலாளர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது. ஆனால் ஆந்திரா போலீஸ் ஈவு இரக்கமில்லாமல் தொழிலாளர்களை காட்டுப்பகுதியிலேயே சுட்டு கொன்று புதைக்கின்றனர். செம்மரக் கடத்தல் கூட்டத்தை அழிக்கும் பணி ரகசிய போலீஸ் பழனியிடம் (தனுஷ்) ஒப்படைக்கப்படுகிறது. அவர் அந்தக் கடத்தல் கூட்டத்துக்குள்ளேயே ஒரு முக்கிய ஆளாக இணைந்து செயல்பட்டு அவர்களின் ரகசியங்களை அறிந்து எப்படி அவர்களை அழிக்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

தனுஷை இதுவரை போலீஸ் அதிகாரியாக பார்த்த ஞாபகம் இல்லை இந்த படத்தில் அவர் ரகசிய போலீஸ் கதாபாத்திரம் ஏற்று கடத்தல் கூட்டத்திற்குள் ஊடுருவி அவர்களின் ரகசியங்களை கண்டறியும் செயல்களில் ஈடுபடுவது இயல்பாக சென்றாலும் ஒரு கட்டத்தில், “நமது கூட்டத்திற்குள்ளேயே ஒரு போலீஸ் ஊடுருவி இருக்கிறான்” என்ற தகவல் கிடைத்ததும் எந்த நேரத்தில் கடத்தல் கூட்டத்திடம் தனுஷ் சிக்கிக் கொள்வாரோ என்ற பதற்றம் காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது

தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி மம்முட்டியுடன் இணைந்து நடித்தாரோ அதுபோல் இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் வாய்ப்பை  ரஜினி மருமகன் தனுஷ் பெற்றிருக்கிறார். இது வேண்டுமென்றே நடந்த நிகழ்வாக தெரியவில்லை எதார்த்தமாக சேர்ந்த ஜோடியாக இருந்தாலும் பல காட்சிகளில் மம்முட்டியும் ரஜினிகாந்த்தும் தளபதி படத்தில் எப்படி நட்போடு இணைந்து நடித்தார்களோ அதே பாலிசியை இந்த படத்திலும் மம்முட்டிக்கும் தனுசுக்கும் சூழ்நிலைகளே ஏற்படுத்தி தந்திருப்பது தனுஷுக்கு கிடைத்த ஜாக்பாட். மம்முட்டி மீது தனுஷ் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அவருடன் இணைந்து நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் மம்முட்டியிடம் அவர் காட்டும் பணிவும், மரியாதையுடன் கலந்த பேச்சும் வெளிப்படுத்துகிறது.

உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மம்முட்டி இருக்கிறார் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்புசெய்திகள் வெளியான நிலையில் அவர் ஓம் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய நிம்மதி கொடுத்திருக்கிறது. அவரது நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தை அசத்தலாக செய்துவிட்டு செல்கிறார். கிளைமாக்சில் நடக்கும் ஜெயில் கலவர காட்சிகள் கூட அவர் சோர்வில்லாமல் சண்டை போடுவது, ஓடுவது என்று எனர்ஜி காட்டி நடித்திருப்பது நடிப்பு மீது அவர் காட்டும் அர்ப்பணிப்பை முழுமையாக வெளிப்படுத்துகிறது.

தனுஷ் ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார் எப்போதுமே அதிரடியான ஆட்டத்துக்கு பேர்போன ஸ்ரீ லீலா இந்த படத்தில் ஒரு குழந்தையின் தாயாக சேலை கட்டிக்கொண்டு நடுத்தர குடும்ப பெண்ணாக வெகு இயல்பான நடிப்பை காட்டியிருக்கிறார். கனவு காட்சியிலாவது தனுசுடன் அவருக்கு ஒரு அசத்தலான ஆட்டத்தை இயக்குனர் வைத்திருந்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கும்.

சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடித்திருப் பத்துடன் ஆக்சன் ஹீரோயினாக மாறியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. ஜெயில் கலவர காட்சியில் அவர் மம்முட்டியை காப்பாற்ற காட்டும் அதிரடி சண்டை காட்சிகள் இது சாய்பல்லவி தானா ஒருவேளை விஜய சாந்தி நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறார்.

ஹிந்தி படங்களில் நஸ்ருதீன் ஷா மிகப் பெரிய நடிகராக வலம் வந்தவர், இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழ் படத்தில் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அவரை இந்த படத்தில் பிரதான வில்லனாக களம் இறங்கியிருப்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு சிந்தனை. இந்த வயதிலும் அவர் தமிழ் பேசி நடித்திருப்பது பிளஸென்றால் அவரது அந்த கம்பீரக் குரல் பெரிய பிளஸ். இனி அடிக்கடி தமிழ் படத்தில் ஷாவை காணலாம்.

படத்தை தனுஷ், ஸ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜாக்மாக் (ஆர் டேக் ஸ்டுடியோஸ் வொண்டர் பார் பிலிம்ஸ்) தயாரித்திருக்கிறார்கள்.

அமரன் வெற்றி படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி ஓம் படத்தை இயக்கியிருக்கிறார். செம்மர கடத்தல் கதை பற்றிய படம் ஏற்கனவே புஷ்பா படமாக அல்லு அர்ஜுன் நடிக்க வெளியாகி இருக்கிறது. அதே கதையா இந்த படத்திலும் எடுத்திருக்கிறார் என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. வேறு களத்தில் இக்கதையை இயக்குனர் கையாண்டிருப்பது பிரில்லியன்ட். படத்தில் இயக்குனர் எழுப்பியிருக்கும் கேள்வியை இரு மாநில அரசுகள் மட்டுமல்லாமல் இரு மாநில மக்களும் பரிவுடன் கவனிக்க வேண்டிய பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

சாய் அபயங்கர் இசை,
கே எழில் அரசு ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.

ஓம் – மனித உயிர்களின் மதிப்புடன் கூடிய உணர்வு பூர்வ ஆக்ஷன் படம்.

Review By
k. Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

‘ப்ராஜெக்ட் கே’ பட தீபிகா படுகோன் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE

Jai Chandran

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend