Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஜிட்டல் ஹைப்ரிட் திரைப்படத் தயாரிப்பில் புதிய முயற்சி..

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) என்று ஆர்.டி. ராஜா கூறினார்.

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER – REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமையான காட்சியமைப்பு முறைகளையும் இணைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில், டி. முத்துராஜின் இந்தப் புதிய முயற்சி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, அவருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரது இந்தப் புதிய முயற்சி தனக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்பது வெறும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளுக்கும், புதுமையான கதை சொல்லும் முயற்சிகளுக்கும், எல்லைகளைக் கடந்து கற்பனை செய்யும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் தளமாக இது அமையும். வழக்கமான திரைப்படம் உருவாக்கும்   முறைகளைத் தாண்டி, தனித்துவமான சிந்தனைகளை ஊக்குவிப்பதும், புதிய காட்சியுலகை உருவாக்குவதும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என ஆர்.டி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரத் துறை, ஆக்கப்பூர்வமான கலைப் பணிகள், தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் டி. முத்துராஜுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்.டி. ராஜா, அவருடைய புதிய முயற்சிக்கு தனது மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும், ஏற்கனவே உள்ள வரம்புகளை மீறிச் சிந்திக்கும் முயற்சிகளையும் முன்னெடுப்பதன் மூலமே புதிய படைப்புகளை உருவாக்க முடியும். சவால்களை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளித்து, அவர்களின் சிந்தனைகளைத் திரையில் கொண்டுவருவதற்கான தளமாக ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு சிந்தனை சவாலானதாக இருந்தாலும், அதைச் சாத்தியமற்றது என்று தொடக்கத்திலேயே நிராகரிக்காமல், முயற்சியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் புதிய முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். புதிய கதைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் இதுவரை சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பதன் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்க முடியும் என ஆர்.டி. ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி. முத்துராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது படம் குறித்த கூடுதல் விவரங்களும் முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்

புதிய தொழில்நுட்பம், புதுமையான கதை சொல்லல், எல்லைகளைக் கடக்கும் கற்பனை எனத் தனித்துவமான முயற்சிகளுடன் உருவாகும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’, தமிழ் சினிமாவில் புதிய படைப்புகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் பட டிரெயிலர்

Jai Chandran

Vivek & Mervin – The creators behind the musical elegance of Enna Solla Pogirai

Jai Chandran

Shah Rukh Khan’s Jawan Music Right Records with ₹36 Crores Deal!*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend