Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சண்டக்காரி ( பட விமர்சனம்

படம் :சண்டக்காரி

நடிப்பு : விமல், ஸ்ரேயா, கே ஆர் விஜயா,, புன்னகை பூவே கீதா,  பிரபு, சத்யன்,  தேவ் கில்,  ரேகா, உமா பத்மநாபன், கிரேன்மனோகர்,  மகாநதி சங்கர்

தயாரிப்பு :புன்னகை பூவே கீதா,

இசை : அம்ரிஷ்

ஒளிப்பதிவு :ஆர் பி குருதேவ்

இயக்கம் : ஆர் மாதேஷ்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

கதை : லண்டனில் வேலை செய்யும் விமலுக்கு  தனக்கு டீம் ஹெட் ஆக இருக்கும்  ஸ்ரேயாவுடன் அடிக்கடி சண்டை நடக்கிறது  ஸ்ரேயாவுக்கு திடீரென்று பாஸ்போர்ட் பிரச்னை ஏற்படுகிறது. இந்தியாவில்  வாழ்ந்தால்தான் பாஸ்போர்ட் கிடைக்கும் என்ற சிக்கல் ஏற்படுகிறது. அவருக்கு உதவுவதற்காக  விமல் சம்மதிப்பதுடன்  கணவராக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருவரும் ஜோடியாக புறப்பட்டு இந்தியா வருகின்றனர். அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகள்  எப்படி  தீர்கிறது என்பதை காதல் டச்சுடன் சொல்கிறது  கிளைமாக்ஸ்.

90ஸ் காலகட்ட பாணியில் படம் உருவாகியிருக்கிறது.  விமல், ஸ்ரேயா ஜோடி சேர்ந்திருப்பது இதுதான் முதல் முறை. என்பதால் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு   இருந்தது. காதல் ஜோடியென்றாலும் நெருக்கம் அதிகம் காட்டாமல் நடித்திருக்கின்றனர்.

லண்டன் அலுவலகத்தில் ஸ்ரேயா, விமல்  போடும் சண்டைகள்  இருவருக்கும் இந்தியா வந்த பிறகும் குட்டி குட்டி சண்டைகளாக தொடர்வது  கலகல.

விமல் தனது தந்தை பிரபுவின் பேச்சை கேட்காமல் அவர் சொல்லும்  வார்த்தையை மதிக்காமல், ” நான் சம்பாதித்து தான் சாப்பிடுவேன்” என்று  வெளிநாட்டுக்கு செல்வதும் பின்னர் ஸ்ரேயாவை  தனது மனைவி என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வருவதாக செய்யும் கலாட்டாக்கள் பிரபுவை காண்டாக்குகிறது.

தனிப்பட்ட முறையில் விமலை சந்தித்து உருக்கமாக பேசும் பிரபு  செண்டிமெண்ட் டச் செய்து மனதை கனமாக்குகிறார். கே ஆர் விஜயா அப்பாத்தாவாக வருகிறார். முதல் பாதி படத்தில் சத்யன், இரண்டாம் பாதியில் கிரேன் மனோகர் காமெடி கலாட்டா செய்கின்றனர்.

புன்னகை பூவே கீதா, படத்தை தயாரித்திருக்கிறார்.  அம்ரிஷ்   இசையில் பாடல்கள்    ஒ கே . ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு பள்ளிச்சிடுகிறது

மெல்லிய காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்  ஆர் மாதேஷ்.

சண்டக்காரி – இன்னும் கூட அடாவடியாக  சண்டை செய்திருக்கலாம்…

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

 

Related posts

ஜி.முருகானந்தம் தயாரிக்கும் இரண்டு புதிய படங்கள்

Jai Chandran

தக்ஸ்” திரைப்பட கதாபாத்திர அறிமுக விழா

Jai Chandran

டிவி ஷூட்டிங் நடத்தலாம்.. கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend