Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராம் அண்ட் லீலா (பட விமர்சனம் )

படம்: ராம் அண்ட் லீலா

நடிப்பு: ரியோ, வர்த்திகா, சேத்தன், முனிஷ்காந்த், மாளவிகா அவிநாசி, தீபா வெங்கட் மா ப க ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாபியா அபு, கவின் ஜி டி

தயாரிப்பு: ஆர் ரவீந்திரன், சுதர்சன்

இசை: அங்கீத் மேனன்

ஒளிப்பதிவு: மல்லிகார்ஜுன்

இயக்கம்:: ராமச்சந்திரன் கண்ணன்

பிஆர்ஓ : சதீஷ்குமார் s2 மீடியா

 

கதை : கிட்டத்தட்ட 40 வயது ஆகியும் திருமணமாகாமல் ஏங்கி கிடக்கிறார் ராம் ( ரியோ ). திருமணத்திற்கு பார்க்கும் பெண்கள் யாரும் இவரை ஏற்க மறுக்கிறார்கள். திடீர் அறிமுகமாகும் நண்பர் ஒருவர், ” நீ லோக்கல் ட்ரெயினில்  தேடிப்பார் உனக்காக ஒரு காதலி கிடைப்பாள் ” என்று சொல்ல அதைக் கேட்டு ராம் லோக்கல் ட்ரெயினில் வாரக் கணக்கில் தேடுகிறான். அதிர்ஷ்டவசமாக தேவதை போல் ஒரு பெண் ராமை காதலிக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் வேற்றுக்கிரகத்தை சேர்ந்தவர் என்ற உண்மை ராமுக்கு தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் எதிர்பாராத திருப்பங்களாக அமைகிறது.

முத்தின கத்திரிக்கா வயதான ரியோ  காதலியைத் தேடி லோக்கல் டிரெயினில் அலைய இது ஒர்க் அவுட் ஆகுமா? ஆகாத என்ற நிலையில் திடீரென்று ரியோவுக்கு மட்டுமல்ல  ரசிகர்களுக்கு ஷாக் தரும் வகையில் தேவதை ரேஞ்சுக்கு ஹீரோயின் வர்த்திகா வருவதும் அவரும் ரியோவை காதலிக்க சம்மதம் தெரிவிப்பதும் எல்லாமே கனவு போல் நடந்து முடிகிறது.

“உன் காலியை எங்களுக்கு காமி” என்று நண்பர்கள் வற்புறுத்த, “ஆறு மணிக்கு மேல் நான் வீட்டை விட்டு  வெளியே வர மாட்டேன்” என்று வர்த்திகா கூறும்போது ஏதோ ஒரு பொடியை இயக்குனர் வைத்திருக்கிறார் என்பதை  புரிந்து கொள்ள முடிகிறது.அந்த உண்மை தெரிய வரும்போது அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்கிறது. அது என்ன என்று இங்கு சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து விடும், அந்த உண்மை தெரிந்த பிறகு கதையே தலைகீழாகி விடுகிறது இது போய் எங்க முடியுமோ என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது

ரியோ தந்தையாக வரும் சேத்தன் மகனிடம்  ஈகோ பார்த்து பேசாமல் இருப்பதும் அதேபோல் தந்தையிடம் ஈகோ பார்த்து ரியோ பேசாமல் இருப்பதும் பல குடும்பங்களில் எதார்த்தமாக நடக்கும் தினசரி காட்சிகள்.

முனிஷ்காந்த், மா ப க ஆனந்த் காதல் மற்றொரு டிவிஸ்ட்

இப்படத்தை ஆர் ரவீந்திரன், சுதர்சன்  தயாரித்திருக் கின்றனர்

அங்கீத் மேனன் இசை ஓரளவுக்கு கை கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர்  மல்லிகார்ஜுன் வேற்று கிரகவாசிகளை எப்படி காட்டுவது என்று தெரியாமல்  திணறினாலும் வண்ணங்களை குழைத்து வேறு உலகங்களை காட்டி சமாளித்திருக்கிறார்.

இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன்  இப்படி ஒரு கதையை யோசித்தது வித்தியாசமான கற்பனை.  சில காட்சிகளில், அந்த கேரக்டர் எங்கே போனது இந்த கேரக்டர் எங்கே போனது என்று விமர்சகர்களை கேள்வி கேட்க விடாமல் எல்லாவற்றிற்கும் ஒரு விடையை காட்சியிலேயே சொல்லி  சமாளித்திருக்கிறார். கிளைமாக்ஸ் எப்படி முடிக்கப் போகிறார்  என்பது   இமாலய சவால். அதில் பாஸ் செய்திருக்கிறார்

ராம் அண்ட் லீலா – நோ லாஜிக், நோ மேஜிக், ஒன்லி ஜாலி என்டர்டெயின்மென்ட்.

Review by

K. Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

Related posts

ஜீவி2 படம் 23 நாள் சவால்: ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார்

Jai Chandran

Sundeep Kishan’s Pan India Film Michael First Look Dropped

Jai Chandran

யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகள் பயணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend