Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒன மேன் (One Man) பட விமர்சனம்

படம்: ஒன் மேன் (One Man)

நடிப்பு: சங்ககிரி ராஜ்குமார் (எல்லா கதாபாத்திரமும்)

தயாரிப்பு: சங்ககிரி ராஜ்குமார்

இசை: சங்ககிரி ராஜ்குமார்

ஒளிப்பதிவு: சங்ககிரி ராஜ்குமார்

இயக்குனர்,: சங்ககிரி ராஜ்குமார்

பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை:  டூவீலர் முதல்  விமான முறை ஓட்டத் தெரிந்து எல்லாத்துறையிலும் தனித்திறமை கொண்ட ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்பட அதனை பெற்று வர ஐந்து பேரும் ஒரே காரில் செல்கிறார்கள். கார் பழுதடைவதால் அதை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள் அங்கே ஒரு பெரிய சோதனை கூடத்தை பார்க்கிறார்கள். அங்கு கிடைக்கும் ஒரு செல்போனை எடுத்து ஆன் செய்யும்போது அதில் அரைகுறையாக விடப்பட்ட சோதனையை செய்தால் இந்த உலகில் 10 நாட்களுக்கு வேறு எந்த உயிரினமும் இருக்காது இங்கிருக்கும் ஐந்து பேர் மட்டுமே உயிரோடு இருக்கலாம் என்று தகவல் கிடைக்க அதை பரிசோதனை செய்ய முயல்கிறார்கள் அதன்பிறகு எதிர்பார்க்காத அற்புதமும் விபரீதமும் சம்பவங்களும் நடந்தேறுக்கிறது.

இதுவரை ஒரு படம் என்றால் ஒரு ஹீரோ ஹீரோயின் வில்லன் இன்னும் சில கதாபாத்திரங்கள் இணைந்து நடிப்பார்கள் அல்லது இருவர் மட்டுமே நடித்த படம் வந்திருக்கிறது ஆனால் ஒரே நபர் படத்தின் அத்தனை பணியும் சொல்ல போனால் நடிப்பு முதல் இயக்கம் வரை உள்ளடக்கிய எடிட்டிங் மேக்கப் சவுண்ட் பின்னணி இசை மிக்சிங் கிராபிக்ஸ் ஒளிப்பதிவு அரங்கம் உள்ளிட்ட 24 வகை துறைகளையும் கையில் எடுத்து படத்தை செய்து முடித்து உலகிலேயே முதன் முறையாக ஒரே நபர் எல்லா பணிகளையும் ஏற்று நடித்து இயக்கியுள்ள படம் என்ற பெருமையை ஒன் மேன் படம் பெற்றிருக்கிறது என்பது தமிழ் திரை உலகுக்கு இன்னும் போனால் இன்னும் சொல்லப்போனால் தமிழனுக்கு உலக அளவில் பெருமை தேடித் தரும் சாதனை படம் என்றால் அது மிகையல்ல.

ஒரே நடிகர் இரட்டை வேடத்தில் அல்லது மூன்று இடத்தில் நடித்தால் அதுவே ஆச்சரியத்தில் ரசிகர்களை அழைத்து விடும் ஆனால் இந்த படத்தில் நூற்றுக்கணக்கான கதாபாத்திரத்தில் ஒரே நடிகர் ஒரே சமயத்தில் ஒரே பிரேமுக்குள் நடித்திருப்பது கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத ஆச்சரியம் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

படக்காட்சிகள், ஆக்சன் காட்சிகள் என பெரும்பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் அமைத்து இருப்பது இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்ற வியப்பை ஏற்படுத்துகிறது

இந்த கேள்விக்கெல்லாம் ஒரே விடை இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக இசையமைப்பாளராக என ஒரே நபர் பொறுப்பேற்று செய்த சங்ககிரி ராஜ்குமாரையே சாரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பல பேர் சேர்ந்து இயக்கும் படம் கூட பலருக்கு இது என்ன படம் என்று நக்கல் அடித்து சென்று விடும் அளவிற்கு காட்சிகளை அமைத்து விடுகிறார்கள் ஆனால் ஒரு நபரை எல்லா வேலையிலும் ஏற்று செய்திருக்கும் ஒன் மேன் படம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இதற்கு மேல் இதற்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி கூட ஒரே நபரால் இல்ல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லோருக்குமே எழும் அந்த கேள்வி இப்படத்தின் பிரமோஷனுக்கு வந்த நடிகர் சத்யராஜுக்கும் ஏற்பட்டது அதற்கெல்லாம் ஒரே பதிலை இந்த படத்திலேயே தந்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். தான் ஒரு நபரே எப்படி எல்லா வேலையும் செய்தேன் என்பதை அவரே பின்னணி கேமரா வைத்து படமாக்கி அதையும் படத்தில் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் இணைந்திருப்பது அரங்கில் இருப்பவர்களை நிச்சயம் கைதட்டி பாராட்ட வைக்கும்.

ஆனால் சங்ககிரி ராஜ்குமாரின்  கடுமையான பணி ஐந்து வருடங்களை எடுத்துக் கொண்டாலும் தொழில்நுட்ப  பணிகளை எல்லாம் அவர் ஒருவரே செய்வதை மேக்கிங் வீடியோவில் பார்க்கும் போது இந்த நபர் மனிதர் தானா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது.

100 நிமிடங்கள் திரையில் ஓடும்  ஒன் மேன் படத்தை ஹாலிவுடடில் யாராவது படமாக்கி இருந்தால் இந்நேரம் உலகமே அந்த நபரை தரையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும் ஆனால் இந்த சாதனையை செய்திருப்பது ஒரு தமிழன் என்பதால் அதை ஒரு வட்டத்துக்குள் சுருக்கி விடாமல் உலக அளவில் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது சமூக வலைதளங்களில் இன்புளுயன்ஸர்களாக  இருக்கும் நபர்களின் கடமை என்று கூட சொல்லலாம்.

ஒன் மேன் – நிச்சயம் பார்க்க  வேண்டிய படம்.

 

 

Related posts

பிரசாந்த்தின் “அந்தகன்” ஆந்தம் பாடல் வெளியிட்ட விஜய்

Jai Chandran

Face of the Future…

Jai Chandran

தயாரிப்பாளர்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend