Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் மற்றும் கன்னடத்தில் காட்டாளன்’ திரைப்படம்..

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!*

*‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை விரிவுபடுத்தும் மனோரமாமேக்ஸ்*

மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை முதன்முறையாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.

பல்வேறு மொழிகளிலான கதைகளை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மலையாள திரைப்படங்களை மற்ற பிராந்தியச் சந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மனோரமாமேக்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ‘காட்டாளன்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட வெளியீடுகள் இதன் தொடக்கமாக அமைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ரசிகர்களும் மலையாளத் திரைப்படக் கதையைத் தங்கள் சொந்த மொழிகளிலேயே பார்த்து மகிழலாம்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சிறப்பான நடிப்பு மற்றும் இசை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘காட்டாளன்’ திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களைக் கவரும் வகையிலான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகத்தை மையமாகக் கொண்ட மோதலின் பின்னணியில் இப்படத்தின் கதை நகர்கிறது. அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சக்திகள், பழிவாங்குதல் மற்றும் உயிர்வாழ்தலுக்காக கடுமையாக மோதுகின்றன. இரக்கத்திற்கு இடமில்லாத இந்தப் போரில், கொடூரமானவர்களே இறுதியில் நிலைத்திருக்கின்றனர்.

இப்படத்தில் ஆண்டனி (பெப்பே) வர்கீஸ், சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பால் ஜார்ஜ், ஷரீஃப் முஹமது மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பல மொழிகளில் வெளியாகியுள்ளதன் மூலம், ‘காட்டாளன்’ திரைப்படத்தை அதன் தாய்மொழியைத் தாண்டி ரசிகர்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பை மனோரமாமேக்ஸ் வழங்குகிறது. அதே நேரத்தில், படத்தின் பிராந்திய அடையாளத்தையும் தக்கவைத்துக் கொண்டு, மேலும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையவும் இந்த முயற்சி உதவுகிறது.

‘காட்டாளன்’ திரைப்படம் தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Related posts

*லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் “விடியும் வரை காத்திரு”

Jai Chandran

ரஜினி 170 வது படத்தை இயக்கிறாரா லாரன்ஸ்?

Jai Chandran

ஜீ வி 2 (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend