Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டார்க் (பட விமர்சனம்)

படம்: டார்க்

நடிப்பு: அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன்,, நட்டி, கே பாக்யராஜ்,  வி டிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி

தயாரிப்பு: ஏ பி வி மாறன் கணேஷ் கே பாபு

இசை: மனோ ரமேஷன்

ஒளிப்பதிவு : ரவி சக்தி

இயக்கம்: கல்யாண் கே ஜெகன்

பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை : வெளியூரில் இருந்து வேலைக்காக சென்னை வருகிறார் அஜய் கார்த்தி.  குறைந்த வாடகைக்கு மாடியில் கட்டப்பட்டிருக்கும் பெரிய வீடு கிடைக்கிறது. ஏற்கனவே அங்கு கொலை தற்கொலைகள் நடந்ததால்  பேய் வீடு என்று பலராலும் அழைக்கப்பட்டு யாரும் அந்த வீட்டுக்கு வர பயப்படும் நிலையில் அஜய் கார்த்தி  துணிச்சலாக தங்க ஒப்புக் கொள்கிறார். வீட்டு ஓனர் பாக்யராஜ் ஏற்கனவே கடன் தொல்லையால் இருப்பதை அஜய் கார்த்தி அறிந்து அவர் மீது பரிதாபப்படுகிறார். இதற்கிடையில் அஜய் கார்த்தி மாடியில் இருக்கும் பேய்கள் படுத்தும்பாட்டில் நிலை குலைந்து போகிறார். ஆனாலும் பாக்யராஜ்காக பேய் தொல்லைகளை தாங்கிக் கொண்டு இருக்கிறார். அஜய்.  பேய் தொல்லையில் இருந்து  மீள்கிறாரா? பாக்யராஜ் கதி என்னவாகிறது என்பதை திகிலுடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.

சமீபத்தில் இறந்த பாக்யராஜ்  நடித்திருக்கும் கடைசி படம் இது. தொடக்க காட்சியிலேயே அவர் பிணமாக இருப்பதுபோல்தான் இந்த இடத்தில் நடித்திருக்கிறார். அந்த சென்டிமென்ட்  தொடக்கத்திலேயே ரசிகர் களுக்கு அதிர்ச்சி தருகிறது.

ஹீரோ அஜய் கார்த்தி இளவட்ட துடிப்புடன்  வருகிறார். “இது பேய் வீடு மூன்றாயிரம் ரூபாய் வாடகை கொடுத்தால் போதும் அட்வான்ஸ் எதுவும் வேண்டாம்” என்று ஹவுஸ் ஓனர் கே பாக்யராஜ் கூறியதும் ஆச்சரியப்பட்டு போகும் அஜய் கார்த்தி இவ்வளவு பெரிய வீட்டுக்கு மூன்றாயிரம் வாடகை  என்றால் எவ்வளவு பேய் இருந்தாலும் நான் இருக்க தயார் என்று கூறும்போது  கார்த்தியின் ஹீரோயிசம்  அதிரி புதிரியாக இருக்கும் என்று எண்ண வைக்கிறது.. ஆனால் காட்சிகள் செல்லச் செல்ல பேய்கள் அவரை தூங்க விடாமல் படுத்தும் பாடு வேலை செய்யாத டிவியில் திடீரென்று அப்படி போடு பாடல் வருவது, அலமாரியில் இருக்கும் புத்தகம் கீழே விழுவது, தோசை சுடும் தவா சமையல் கட்டில் தூக்கி வீசப்படுவது என பேயின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததும் அஜய் கார்த்தி பித்து பிடித்தவர்போல் மாறி நடைபிணமாகும்போது இவருக்கு இதெல்லாம் தேவையா என்று என்ன தோன்றினாலும்  ஹவுஸ் ஓனர் பாக்யராஜ் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் மிகப்பெரியது என்பதை சொல்லாமல் சொல்கிறது.

போலீஸ் அதிகாரியாக நட்டி நடி த்திருக்கிறார்.  கட்டிலில் பிணமாக படுத்திருக்கும் அஜய் கார்த்தி அருகில் நட்டி அமர்ந்து தம் அடிக்கும்போது திடீரென்று அஜய் கார்த்தி உடல் எழுந்து “இங்கிருந்து போயிடுங்க ” என்று நட்டியை பதறுவிடும் காட்சியில் அரங்கே பதறிப் போகிறது.

எந்த நேரத்தில் பேய் வெளி வருமோ,  ஆட்டிப்படைக்குமோ என்ற பயம் முற்றிலுமாக அரங்கில் இருப்பவர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்போது நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது இதயம் பலகீனமானவர்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பு தைரியத்தை துணைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதை மட்டும் கன்ஃபார்ம் செய்து கொள்வது நல்லது.

கே பாக்யராஜின் இயல்பான நடிப்பு சன்னமான அவரது வசனங்கள் கேட்கும் போது இப்படி ஒரு ஜாம்பவானையா இழந்து விட்டோம் என்பதை நம்பவே முடியவில்லை..

போலீஸ் அதிகாரியாக நட்டி நடித்திருக்கிறார் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவதும் அதே சமயம் பேயின்  அலறலுக்கு தூக்கி அடித்து விழுவதும் திகில் காட்சிகள். அஞ்சனா நேத்ரன் சைலண்டாக வந்தாலும் அவரது கதாபாத்திரம் சஸ்பென்சாக அமைக்கப்பட்டிருப்பது மற்றொரு அதிர்ச்சி.

ஏ பி வி மாறன்,  கணேஷ் கே பாபு  இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

மனோ ரமேஷன் பயமுறுத்தும் இசையும்  ஒளிப்பதிவாளர்  ரவி சக்தி திகில் பரப்பும் காட்சிகளையும் ஒரு சேர தந்திருக்கிறார்கள்.

படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஹாலிவுட் காட்சிகளுக்கு இணையாக சீன்களை அமைத்து திடுக்கிட வைக்கிறார் இயக்குனர் கல்யாண் கே ஜெகன்.

டார்க்- பயமுறுத்துகிறது.

Review by

K Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

Related posts

Actor Jai got his first jab done today

Jai Chandran

Chiranjeevi’s Vishwambhara Glimpse Released

Jai Chandran

ஹீரோவுடன் நெருக்கமாக நடித்தது ஏன்? நடிகை அஸ்வினி பதில்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend