Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கட்டா குஸ்தி 2 (பட விமர்சனம் )

படம்: கட்டா குஸ்தி 2

நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மோக்ஷா, லிசா ஆண்டணி, ஸ்ரீ ஜா ரவி, கஜராஜ்

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் விஷ்ணு விஷால்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு : கே எம் பாஸ்கரன்

இயக்கம்: செல்லா அய்யாவு

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் இன்பன் உதயநிதி

பிஆர்ஓ : சதீஷ் (AIM )

 

கதை: மல்யுத்த வீராங்கனை  கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி ) மாநில அளவில் சாம்பியன். அவரது விளையாட்டுக்கு எந்த இடையூறும் வராமல் தனது குழந்தையையும் வீட்டையும் பார்த்துக் கொண்டு மனைவிக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறான் வீரா (விஷ்ணு விஷால்). எப்படியாவது கீர்த்தியை போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என்று அவளது பயிற்சியாளர் எண்ணுவதுடன் தனக்கு வேண்டிய பெண் ஜெய்பதற்கான சதி வேலை செய்கிறார். இந்த விஷயம் தெரியாமல் மனைவியின் கோபத்தை குறைக்க அவருக்கே தெரியாமல் சில மருந்துகளை உணவில் கலக்கி தருகிறான் வீரா. இதனால் கீர்த்தி மல்யுத்த போட்டியில்  தோற்கிறார். அதற்கான காரணம் கணவன்  வீரா தான் என்பதை அறிந்து அவனை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறாள். இதன் முடிவு என்னவாகிறது என்பதுதான் சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்

விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க ஏற்கனவே கட்டா குஸ்தி முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம்  வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்திலேயே எல்லாம் சொல்லிவிட்டார்களே இரண்டாம் பாகத்தில் என்னவிருக்கப் போகிறது என்ற அரைகுறை மனதுடன்தான் படத்தை பார்க்க தொடங்குகிறோம் ஆனால் ஒரு சில காட்சிகள் நகர்த்த உடனே நம்மையும் அறியாமல் படத்தில் ஐக்கியமாகி விடுகிறோம்.

வீட்டு கணவர்  (ஹவுஸ் ஹஸ்பெண்ட் ) என்ற அடைமொழியுடன் விஷ்ணு விஷால் நடித்திருப்பது மற்ற ஹீரோக்கள் யாரும் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள் வேண்டுமானால் மறைந்த கே. பாக்யராஜ் இந்த பாத்திரத்தில் நடித்திருக்கலாம். அந்த அளவுக்கு ஹவுஸ் ஹஸ்பெண்ட்  என்று விஷ்ணு விஷாலை மற்றவர்கள் குத்திக்காட்டி பேசுவதை அவர் கண்டுகொள்ளாமல் அதை தனக்கு பிளஸ் ஆக எடுத்துக்கொண்டு நடித்திருப்பது அவர் அந்த பாத்திரத்தோடு எவ்வளவு ஒன்றிப்போய் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இதனால் அவர் ஒட்டுமொத்த பெண்கள் மனதிலும் குறிப்பாக மனைவிமார்கள் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி கோபத்தை குறைப்பதற்காக யாரோ ஒரு வைத்தியர் கொடுக்கும் மருந்தை அவர் உணவில் கலந்து கொடுக்கும்போது பின்னாளில் அவருக்கு பெரிய ஆப்பு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்ததாக விஷ்ணு  விஷாலை மனைவி ஐஸ்வர்யா லட்சுமி வீட்டை விட்டு துரத்தி அடிக்கும்போது அடுத்து இவர்கள் விவகாரம் கோர்ட்டுக்கு தான் போகப்போகிறது என்று யூகிக்க முடிந்தாலும் அந்த கோட்டு காட்சியில் ரம்யா கிருஷ்ணன் சிறப்பு தோற்றத்தில்  நீதிபதியாக வந்து  பாகுபலி பாணியில் கோர்ட்டில்  வக்கீல்களை அலற விடுவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

கிளைமாக்சில் விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமி மல்யுத்த போட்டியில் மோதப் போகிறார்கள் என்ற ஒரு திருப்பத்தை இயக்குனர் வைத்து ஆவலை இரண்டு மடங்காக தூண்டி விடுவதும்.அந்த போட்டிக்கு டிக்கெட்டெல்லாம் வசூல் செய்து கட்அவுட் வைத்து யோகி பாபுவை நடுவராக வரவழைத்து போட்டியை நடத்தும்போது அரங்கு கலகலப்பில் ஆழ்ந்து விடுகிறது.

கிளாஸ் டீச்சர் மீனுவாக வரும்  மோக்ஷா ஸ்பெஷல் அட்ராக்சன். அப்படி போடு போடு பாடலுக்கு விஷ்ணு விஷால் மற்றும் அவரது குழந்தையுடன் மோக்ஷா ஆடும் ஆட்டம் அரங்கை அதிர விடுகிறது. படத்தின் மைய புள்ளியாக வருகிறார் விஷ்ணு விஷாலின் மகளாக நடித்திருக்கும் அந்த குழந்தை.

முனிஷ்காந்த்,  காளி வெங்கட், கருணாகரன் எல்லோருமே தங்கள் பாத்திரங்களில் ஸ்கோர் செய்கிறார்கள். குறிப்பாக பெண்கள் என்றாலே கடுகடு என்று பேசி அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்று பேசும் கருணாஸ்  தன் மனைவி கவுன்சிலர் ஆன பிறகு ஆங்கிலம், இந்தி என்று பேசி அதிர விடும்போது பெட்டிப் பாம்பாக அடங்கி வீட்டு கணவராக கருணாஸ் மாறும் போது  சிரிக்க வைக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் விஷ்ணு விஷால் இணைந்து படத்தை தயாரித்திருக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசை ஆக்ஷன் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. வண்ணக் கலவையில் ஓவியம் வரைந்தது போல் ஒவ்வொரு காட்சியும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன்.

இரண்டாம் பாகம் எடுப்பதென்றால்  சுவாரஸ்யமாக எடுப்பதில் கோட்டை விடுவார்கள் ஆனால் இயக்குனர் செல்லா அய்யாவு  கடடா குஸ்தி இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியையும்  ருசிகரமாக்க அவர் பட்டிருக்கும்பாடு கிளைமாக்ஸ் வரை ஜாலியாக படத்தை கொண்டு  செல்கிறது.. படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான ஸ்டஃப்பும் அவரிடம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

மோதலில் இருக்கும் கணவன் மனைவி ஜோடியாக இந்த படத்தை பார்த்தால் மோதலை மறந்து மீண்டும் மகிழ்ச்சியான ஜோடியாக மாற வாய்ப்பிருக்கிறது

கட்டா குஸ்தி 2 – குடும்பத்துடன் பார்க்க பொருத்தமான படம்.

Review By

K Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

தணிக்கை “கட்” இல்லாமல்  “கட்டில்” படத்துக்கு யூ சான்று

Jai Chandran

மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ் ஒ டி டி

Jai Chandran

அமேசானில் அமிதாப், ஜோ, கீர்த்தி படம் உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend