Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மம்பட்டியான் ஸ்டார்ஸ் (வெப் சீரிஸ் விமர்சனம் )

படம்( வெப் சீரிஸ்): மம்பட்டியான் ஸ்டார்ஸ்

நடிப்பு: வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத்

கதை :சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன்

தயாரிப்பு: சிங்காரவேலன்

இசை: சவுண்ட் டிசைன்: அருள் முருகன்

ஒளிப்பதிவு: பி எம் ராஜ்குமார்

இயக்கம்: சவிர் சுதாகர்

பிஆர்ஓ : சதீஷ் (AIM )

வெளியீடு: ZEE5 OTT தளம்

கதை : கிராமப்புற  பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சென்னை அணியின் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களில் இளம் பெண் உட்பட நான்கு இளைஞர்கள் தல கிரிக்கெட் வீரரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஊருக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சென்னையில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை நேரில் பார்க்க வேண்டும், விளையாட்டு வீரர் தலயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணத்தை திருடி கொண்டு சென்னை வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு மைதானத்துக்குள் செல்ல போலியான டிக்கெட் தரப்படுவதையடுத்து அவர்களால் போட்டியை காண முடியாத நிலை ஏற்படுகிறது. எப்படியாவது சம்பாதித்து போட்டியை நேரில் காண வேண்டும் என்று முடிவு செய்யும் இளைஞர்களும் அந்த பெண்ணும் என்ன பாடுபடுகிறார்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் எப்படி கிரிக்கெட் சூதாட்டத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது தான் இந்த வெப் சீரிசின் கதை.

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் இந்த நான்கு பேர் தான் மம்பட்டியான் ஸ்டார்ஸ் முக்கிய கதாபாத்திரங்கள்.

வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் மூன்று இளைஞர்களும் கிராமப்புற பகுதியில் இருந்தாலும் கிரிக்கெட்டின் விதிமுறைகளை அறிந்தவர்கள் என்பதை அவர்கள் ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருக்கும் போது நடக்கும் எதிர் கோஷ்டியின் மோதலின் போது வெளிப்படுவது சுவாரசியம்.

ஊருக்குள் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், ஆடும் லோக்கல் கிரிக்கெட் எபிசோட்கள்  பெரிய பரபரப்பு இல்லாமல் நகர்கின்றன.

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் கூட்டணி சென்னைக்கு வந்த பிறகுதான் எபிசோடில் சூடு பிடிக்கிறது. அதன் பிறகு காட்சியில் வெவ்வேறு திசைகளில் பயணித்து ஆர்வத்தை தூண்டுகிறது. விளையாட்டு மைதானத்தில் இவர்களால் கிரிக்கெட்டை பார்க்கவே முடியாது என்ற சூழல் விழும்போது எப்படியாவது கிரிக்கெட்டை பார்த்து ஆக வேண்டும் என முடிவு செய்து சமோசா விற்க இளைஞர்களின் தயாராவது அவர்களின் கிரிக்கெட்  வெறியை காட்டுகிறது.

ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணத்தை திருடிக் கொண்டு வந்த விஷயம் ஊரில் தெரிந்த பிறகு  வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்  தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை  பணத்தை திருப்பி கொடுத்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நிலையில்  திடீரென்று அவர்களுக்கு கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு வருவது எதிர்பார்க்காத டிவிஸ்ட்

கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்கிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக இந்த வெப் சீரிஸில் காட்டியிருக்கிறார்கள். இவ்வளவு மட்டும்தான் மோசடி நடக்கிறதா என்று கேள்வி எழும் அளவுக்கு குறைந்த அளவிலான மோசடிகள் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.

சூதாட்ட காட்சிகள் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு பதிலாக ஊரில் இன்னும் பல கிரிக்கெட் சூதாட்ட குழுக்களை உருவாக்கும் நிலை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் தான் ஏற்படுகிறது.

வெப் சீரிஸ் கதையை  சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் இணைந்து எழுதி இருக்கிறார்கள்

சிங்காரவேலன் தயாரித்துள்ளார். பி எம் ராஜ்குமார் ஒளிப்பதிவு காட்சிகளை திசை திருப்பாமல் கூர்மை தீட்டி இருக்கிறது.

மம்பட்டியான் ஸ்டார்ஸ்  – வெப் சீரிசை ஜி5 OTT தளத்தில் குடும்பத்துடன் காணலாம்.

 

 

 

 

 

 

 

Related posts

Raame Aandalum Raavane Aandalum Release Date

Jai Chandran

என் டான்ஸை இயக்குனரே ஆடிவிட்டார்: நடிகர் ஜீவா ஆதங்கம்

Jai Chandran

வினியோகஸ்தர்கள் சங்கத்தில் மருத்துவ முகாமை துவக்கிய உதயநிதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend