படம்: அங்கீகாரம்
நடிப்பு: ஜெ ராஜேஷ்,, செந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே,, மன்சூர் அலிகான், ரமா மோகன் ராம்
தயாரிப்பு: அருண் முருகன், அஜித் பாஸ்கர், எஸ் கே பிரசாந்த்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: விஸ்வநாத் ஏ
இயக்கம்: தென்பதியான்
பிஆர்ஓ : யுவராஜ்
கதை :துப்புரவு தொழிலாளி தாயின் மகன் ஓட்டப்பந்தய வீரனாக போட்டிகளில் சாதனை புரிகிறான். தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக அவரது பெயர் அனுப்பப்படுகிறது. ஆனால் அது திடீரென்று நிராகரிக்கப்படும் நிலையில் தனக்கு தகுதிகள் இருந்தும் தன்னை நிராகரித்தது தவறு இதில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கு என்னவாகிறது, இவரால் போட்டியில் பங்கேற்க முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு கிளைமேக்ஸ் பதில் அளிக்கிறது
ஜெ ராஜேஷ் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் இவர் ஒரு பட தயாரிப்பாளர் மட்டுமல்ல டாக்டரும் ஆவார். அதற்காக ஓட்டப்பந்தய வீரராக தான் ஏற்ற கதாபாத்திரத்தை மேம்போக்காக நடிக்காமல் தன்னை ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த வீரர் போல் தனது உடற்கட்டை உருமாற்றம் செய்து கதாபாத்திரத்திற்கு பிட்டாக மாற்றி அமைத்துக் கொண்டிருப்பது பெரிய பிளஸ்.
காலில் அடிபட்டு விட்டது என்ற காரணத்தைக் காட்டி அவரை தெற்காசிய போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வதும் அந்த வழக்கு விசாரணை ஏனோ தானோ என்றில்லாமல் நிஜமாகவே ஹை கோர்ட் வளாகத்துக்குள் நடக்கும் வழக்கு போலவே அமைத்திருப்பது ஆச்சர்யமூட்டுகிறது.
நீதிபதியாக நடித்திருக்கும் மோகன் ராம் அந்த பாத்திரத்திற்குள் தன்னை ஒன்ற வைத்திருப்பதுடன் வாத பிரதிவாதங்களுக்கு அவரே எதிர் கேள்வி கேட்டு உண்மையை வரவழைப்பதும் சரியான ஆதாரம் கிடைத்தபின் விளையாட்டு துறை உயர் அதிகாரி மீது கோர்ட்டுக்குள்ளேயே எடுக்கும் கைது நடவடிக்கையும் அப்ளாஸ் பெறுகிறது.
அட்வகேட் ஜெனரலாக நடித்திருக்கும் மூத்த நடிகை விஜி வெங்கடேஷ் அலட்டலே இல்லாமல் தனது வாதங்களை கம்பீரமாக எடுத்து வைக்கும் போது இவர் நிஜமாகவே அட்வகேட் ஜெனரலாக இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார்
நீதிபதி முன் தனக்குத்தானே வாதாடும் ஹீரோ ஜெ ராஜேஷ் துல்லியமான பாயிண்டுகளை பேசி அட்வகேட் ஜெனரல் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் தரும்போது அசர வைக்கிறார்.
ஓட்டப்பந்து வீரருக்குண்டான தகுதி இவருக்கு இருக்கிறதா என்று மீண்டும் பரிசோதிக்க சொல்லி நீதிபதி உத்தரவிடுவதும் அதற்கேற்ப பயிற்சிகள் எடுத்து ஓடுவதற்கு தயாராகும் போது எதிர்கொள்ளும் தாக்குதல்கள் இவரால் இந்த பந்தயத்தில் வெற்றி பெற முடியுமா என்ற பதட்டத்தை அரங்கம் முழுவதும் ஏற்படுத்துகிறது.
கிளைமாக்சில் எதிர்பார்க்காத ஒரு ஷாக்கை ஜே ராஜேஷ் தரும்போது அவர் மீது இரக்கம் பிறப்பதற்கு முன் தன்னம்பிக்கை பிறக்கிறது என்பதுதான் உண்மை.
மன்சூர் அலிகான் மந்திரியாக நடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.
அருண் முருகன், அஜித் பாஸ்கர், எஸ் கே பிரசாந்த் படத்தை தயாரிக்கின்றனர்.
வசனங்கள் நிறைந்த படத்திற்கு இப்படிக் கூட விறுவிறுப்பான இசை அமைக்க முடியும் என்ற ஜிப்ரானின் இசைத் திறமைக்கு அவர் விரைவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் என்பது நிச்சயம்
விஸ்வநாத் ஏ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பிளஸ். பரிசோதனை ஓட்ட காட்சியில் ஸ்லோமோஷனை தவிர்த்து வேகத்தை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும் அதே சமயம் மற்றொரு காட்சியில் ஹீரோ ஓடும்போது அந்த ஓட்டத்தை குதிரையின் ஓட்டத்துக்கு ஏற்ப ஒப்பிட்டு படமாக்கி இருக்கும் காட்சி சபாஷ் பெறுகிறது.
இயக்குனர் தென்பதியான் ஒரு உண்மை கதையை இவ்வளவு எதார்த்தமாக படமாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் எப்போதாவது நடக்கும் ஆச்சரியங்களில் ஒன்று.
அங்கீகாரம் – இளம்விளையாட்டு வீரர்களுக்கு உந்து சக்தி.

Review by
K. Jayachandhiran
Trending cinemas now.con
