Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜபாரதி இயக்கி நடித்துள்ள படம் ” கொம்பா”..

Golden Arrow production என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு “கொம்பா” என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.

பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காந்தாரா படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான உக்ரம் ரவி இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்ய புரூஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ராஜ பாரதியும் இசையமைப்பாளர் புரூசும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர்.
செல்வா எடிட்டிங் செய்ய கலை இயக்குனராக முரளி பணியாற்றியுள்ளார். மற்றும் சண்டை பயிற்சியாளராக ஜோஸ்வா இணைந்துள்ளார்.
நடனம் – அப்துல்
மாரியம்மா மேக்கப் பணிகளை செய்துள்ளார்.
ஸ்டில்ஸ் – பிரபு
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு மேற்பார்வை – மாதவன்,நந்தகுமார்.
நிர்வாக தயாரிப்பு – ஏற்காடு சிவா
தயாரிப்பு நிறுவனம்- Goldan Arrow
தயாரிப்பாளர்- சண்முகசுந்தரம்.

கதை, திரைக்கதை,வசனம்,பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார் ராஜ பாரதி.

படம் பற்றி இயக்குனரும், கதாநாயகனுமான ராஜ பாரதி பகிர்ந்தவை…

இது ஒரு வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த அக்ஷன் திரில்லர் படம்.

இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு வகையான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து விதவிதமாக இறக்கப்படும் போதை பொருட்களால் நம் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் அவரை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் இந்த போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கியிருக்கிறேன்.

அப்பா மகன் சென்டிமென்ட் கலந்து இன்றைய சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்தை சொல்லுகிற படமாக இது இருக்கும்.

படப்பிடிப்பு சேலம், ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் ராஜபாரதி.

Related posts

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Jai Chandran

Theethiriyaai from “Brahmāstra Part One : Shiva” is out!

Jai Chandran

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to stream from 19th Aug

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend