Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரூம் பாய் ( Room Boy ) (பட விமர்சனம்)

,படம்: ரூம் பாய்

நடிப்பு: நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர் கேரளா பெ ஹமின், இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரலி

தயாரிப்பு: சூரியகலா சந்திரமூர்த்தி

இசை:வேலன் சகாதேவன்

ஒளிப்பதிவு : சி.பாரதி ராஜன்

இயக்கம்: ஜெகன் ராயன்

பி ஆர் ஓ : புவன் செல்வராஜ்

கதை :பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறான் சஞ்சய் (நிகில் ). அங்குள்ள மேனேஜர் கண்டிப்பாக நடந்து கொள்வதுடன் பணி ஆட்கள் தவறு செய்தால் அவர்களை அடித்து துன்புறுத்துகிறார். நட்சத்திர ஓட்டலில் தங்க வரும் வெளிமாநில இளம் பெண்ணை காதலிக்கிறான் சஞ்சய். இந்நிலையில் ஹோட்டல் மேனேஜர் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? அதற்கான பின்னணி என்ன என்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் பதிலளிக்கிறது கிளைமாக்ஸ்.

ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படும் ஏலகிரி சுற்றுலா தல மலைப்பகுதியில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடந்துள்ளது. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். குடும்ப பாசம், மர்டர் மிஸ்ட்ரி, இளவட்ட காதல், ஆக்சன், செண்டிமென்ட் என்று எல்லா அம்சங்களையும் கலந்து ஸ்கிரிட் அமைத்திருப்பது காட்சிகள் மெல்ல நகர்ந்தாலும் அவ்வப்போது ஏற்படும் திருப்பங்களால் விறுவிறுப்பு கூடுகிறது.

ஹீரோ சஞ்சயாக சி.நிகில் நடித்திருக்கிறார். தொடக்க காட்சிகளில் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருக்கும் நிகிலின் வாழ்க்கை பிளஷ்பேக் விரியும்போது குடும்ப சென்டிமென்ட்,, தங்கை சென்டிமென்ட் என்று நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

நிகில் மற்றும் ஹிந்திக்காரப் பெண் ஹர்ஷா காதல் கதையாக செல்லும் என்று நினைத்தால் திடீரென்று ஏற்படும் டிவிஸ்ட் படத்தை மர்டர் மிஸ்டரி நோக்கி கொண்டு செல்கிறது.

காமெடிக்கு காத்து கருப்பு பயன்பட்டிருக்கிறார்.
மும்பை மாடல் அழகி நிதி மரலி கவர்ச்சி பாடல் காட்சி ரசிகர்களுக்கு விருந்து. மேலும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர் கேரளா பெஹமின் நடித்திருக்கிறார்கள்.

சூரியகலா சந்திரமூர்த்தி படத்தை தயாரித்திருக்கிறார்.

வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் ஓகே பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மர்டர் மிஸ்டரி யை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கும்.

ஏலகிரி சுற்றுலாவை முடித்தது போன்ற ஒரு உணர்வை சி.பாரதிராஜன் கேமரா தந்திருக்கிறது

திரைப்பட கல்லூரி மாணவர் இயக்குனர் ஜெகன் ராயன் படித்த எல்லா விஷயத்தையும்  ஒரே படத்தில் இறக்க முயற்சித்திருக்கிறார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் ட்விஸ்ட்டுகள் ரசிகர்களை இருக்கையில் நிமிர வைக்கிறது.

ரூம் பாய் – ஒருமுறை பார்க்கலாம்.

Review by
K Jayachandhiran
trending cinemas now. com

Related posts

இளையராஜா பிறந்த நாள்: கமல்-திரைப்பட குழு வாழ்த்து

Jai Chandran

The TOP TWO HIGHEST GROSSERS OF SHAH RUKH KHAN

Jai Chandran

Odu Odu Aadu Song Promo From PushpaTheRise

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend