படம்: வெளவல்ஸ்
நடிப்பு: யூகிசேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பன், சம்யுக்தா விஸ்வநாதன், தீபக் பரமேஷ் மற்றும் பலர்
தயாரிப்பு: ராஜு ஸ்ரீகர், ஹரி உத்ரா
இசை: சரவணா சுப்பிரமணியம்
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூசாரி, சந்திப் அல்லூரி,
இயக்கம்: திலீப் குமார், சங்கீத்,ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன்
பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா
ஆங்கிலத்தில் வவ்வல்ஸ் என்பதை தமிழில் உயிரெழுத்து என்பார்கள். இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்வதற்கு காரணம் படத்தில் உயிர் பிரச்சினைகள் உணர்வு பிரச்சினைகளை பேசி இருப்பது தான்.
கதையைப் பொறுத்தவரை மீண்டும் ஒரு பயணம்
ஈரோஸ்
வர்ணஜாலம் உள்பட ஐந்து டைட்டில்களில் கதைகள் இடம் பெறுகிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல் ஒவ்வொரு கதையும் ரசிக்கும் படியாக படமாகியிருக்கிறது.
குறிப்பாக யூகி சேது, சின்னி ஜெயந்த் நடித்திருக்கும் காதல் எபிசோடில் யூகிசேது பேசும் வசனங்கள் அரங்கை கலகலப்பாக்குகிறது. அதேபோல் 55 வயதில் திருமணத்துக்கு மேட்ரிமோனியில் பெண் பார்த்து அவரை மணக்க முடிவு செய்து தனது சிறுவயது காதலை நினைத்துப் பார்க்கும் சின்னி ஜெயந்த் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன.
ராஜ் ஐயப்பன், சம்யுக்தா விஸ்வநாதன், தீபக் பரமேஷ் போன்றவர்களும் தங்களுக்கான வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
திலீப் குமார், சங்கீத்,ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து
இயக்குனர்கள் ஆந்தாலாஜி பாணியில் ஒவ்வொரு எபிசோடுகளாக வெவ்வேறு களத்தில் அதாவது சைக்கோ திரில்லர், காதல், பாதுகாப்பு உணர்வு, பழிவாங்கும் காதல் நாடகம் என வெவ்வேறு கோணத்தில் தங்களது கதைகளை இயக்கி இருக்கிறார்கள். குறிப்பாக சின்னி ஜெயந்த் எபிசோடும், மருத்துவமனையில் உண்மையான காதலுக்காக எங்கும் இளம் பெண்ணின் கதையும் மனதை தொடுகிறது. டூவீலரில் செல்லும்போது ஹெல்மட் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதை கூட ஒரு உணர்வுபூர்வமான கதையாக அமைத்திருப்பது சொல்ல வேண்டிய விஷயம் என்று சொல்ல வைக்கிறது. இறுதியாக வரும் ஒருவரை ஒருவர் நம்பாத அந்த காதல் கனவு எபிசோட் புரியாத புதிர்.
வவ்வல்ஸ் – ஆந்தாலாஜி பிரியர்களுக்கு பிடிக்கும்.

Review by
k . Jayachandhiran
trending cinemas now. com
