படம்: கொலைச் சேவல
நடிப்பு : கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா கயல், மணிமேகலை
தயாரிப்பு: ஆர்பி பாலா, கௌசல்யா பாலா
இசை: சாந்தன்
ஒளிப்பதிவு: பி ஜி முத்தையா
இயக்கம் வி ஆர். துதிவானன்
பி ஆர் ஓ : நிகில் முருகன்
நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி அனுவை (தீபா பாலு ) அழைத்துக் கொண்டு குலதெய்வ கோவிலுக்கு செல்கிறான் காளி (கலையரசன்). போகும் வழியிலேயே சில தடங்கல்கள் ஏற்படுகிறது. ஆனாலும் இருவரும் கோவிலுக்கு சென்று சேர்கிறார்கள். பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் காளியும் அனுவும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது ஒரு கூட்டம் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்கிறது. இந்த அதிர்ச்சிக்கு பின்னணி என்ன? என்பதை ஈரக்குலை நடுங்க சொல்கிறது கிளைமாக்ஸ்.
பசுமை சூழ்ந்த கிராமத்தில் எளிமையான அந்த ஓட்டு வீட்டில் கலையரசனும், அவரது மனைவி தீபா இருவரும் எதார்த்தமான பேச்சுக்களில் தங்களது அன்பை பகிர்ந்து கொள்வதும், கலையரசனின் உதவியாளராக வரும் பால சரவணனும், மற்றொருவரும் கலையரசனனை நக்கல் செய்து கிண்டலடித்து பேசினாலும் நட்புக்குள் உள்ள இறுக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
படத்தின் முதல் பாதி வரை கலையரசன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு புறப்பட்டு செல்லுவதுவரையான காட்சிகள் மட்டுமே நடந்து முடிகிறது. இதற்கிடையில் கிளைமாக்சுக்கான லீடு கொடுக்கும் வகையில் மற்றொரு கூட்டம் பைக்கில் செல்வது, கஜராஜ் தன்னுடன் பேரனை அழைத்துச் செல்வது என சில காட்சிகளை சேர்த்து எதற்காக இவர்களை இந்த சீனில் சேர்க்கிறார்கள் என்ற ஒரு கேள்வியை எழுப்ப வைக்கிறார் இயக்குனர்.
இடைவேளைக்கு பிறகு படத்தை சுவாரஸ்யத்துடன் தொடங்குகிறார்கள். கலையரசனும் தீபாவும் எப்படி செல்போனில் பேசி காதலர்கள் ஆகிறார்கள் என்ற எபிசோட் மனதை நெகிழ வைக்கிறது.
ஆணவ கொலை பற்றி சொல்கிறேன் பார் என்று கொடூரமான கிளைமாக்ஸ் வைத்து படத்தையே கொதறி விடுகிறார் இயக்குனர் துதிவானன் ஆணவக் கொலை நடப்பதை காட்டினாலும் இவ்வளவு கொடூரமான காட்சிகளை எப்படித்தான் சென்சார் அனுமதித்தார்களோ என்று கேள்வி எழுகிறது. நினைத்தாலே உடல் நடுங்கும் கிளைமாக்ஸ்.
ஆணவ கொலையில் சில காட்சிகளை வெட்டி எறிந்தால் மட்டும்தான் பெண்களாலும் குழந்தைகளாலும் ஏன் சில ஆண்களால் கூட இந்த படத்தை பார்க்க முடியும்.
ஆர்பி பாலா, கௌசல்யா பாலா படத்தை தயாரித்திருக்கின்றனர்.
சாந்தன் இசை ஓகே ரகம். சில இடங்களில் ஹாரர் இசை கொடுத்து பேய் படமோ என்று பயமுறுத்துவது ஏனோ?
பி ஜி முத்தையா கேமரா கிராமத்தையும், அடர்ந்த காட்டையும் பசுமையாக படம் பிடித்திருக்கிறது. ஆணவ கொலை கொடூரத்தை எப்படி படமாக்கினார் என்பது திகைப்பு.
கொலைச் சேவல் – நடுங்க வைக்கும் ஆணவ படுகொலை.

Review By
K. Jayachandhiran
trending cinemas now.
